வெளியான 4 நாட்களில் கேபிள் டிவியில் தர்பார் டெலிகாஸ்ட்!

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Updated: Jan 14, 2020, 09:02 AM IST
வெளியான 4 நாட்களில் கேபிள் டிவியில் தர்பார் டெலிகாஸ்ட்!

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்த படம் கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் உள்ள ஒரு தனியார் கேபிள் டிவி சேனலில் ‘தர்பார்’ திரைப்படத்தை ஒளிபரப்பி இருப்பதை அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். 

வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில் கேபிள் டிவியில் படத்தை ஒளிபரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என படக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Image

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.