வெளியானது தீபிகா படுகோன்-ன் "சபாக்" படத்தின் டிரைலர்!!

இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருக்கும் சபாக் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Last Updated : Dec 10, 2019, 02:03 PM IST
வெளியானது தீபிகா படுகோன்-ன் "சபாக்" படத்தின் டிரைலர்!! title=

இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் நடித்திருக்கும் சபாக் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, "சபாக்" என்ற பெயரில், ஹிந்தியில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.  

இயக்குனர் மேக்னா குல்சர் இயக்கிவரும் இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க லட்சுமி அகர்வாலின் வாழக்கையில் நடந்த சம்பவங்களை  மையப்படுத்தி உருவாகிவருகிறது.  இப்படத்தில் நடிக்கும் தீபிகா படுகோன் அச்சு அசல் அசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மியை போன்றே தோற்றமளிக்கிறார். 
 
ஏற்கனவே இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Trending News