D50 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப்போகும த்ரிஷா?

Dhanush D50 Update: ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 4, 2023, 04:28 PM IST
  • தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார்.
  • இந்த படம் கேங்ஸ்டர் நாடகமாக உருவாக உள்ளது.
  • படத்தில் நாயகியாக இணைய த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.
D50 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கப்போகும த்ரிஷா? title=

தனுஷ் டி50 படத்தின் முக்கிய அப்டேட்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. 

இதற்கிடையில் தற்போது தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குகிறார். இதற்கு தற்காலிகமாக 'D 50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அத்துடன் இந்த படத்தில் விஷ்ணு விஷாலை தவிர எஸ்.ஜே. சூர்யா போன்ற பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கர்ப்பத்திற்கு பின் காதலரை அறிமுகப்படுத்திய இலியானா: வைரலாகும் போட்டோ

இந்த நிலையில் தனுஷின் 50வது படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்த்தில் திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்குமுன்பு திரிஷா, தனுஷுடன் கொடி படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்காக வடசென்னை பின்னணியை கொண்ட செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் ’கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனுஷ் இந்த படத்தில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் தனுஷ் ’பா பாண்டி’ திரைப்படத்தை இயக்கினார், அத்துடன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே அடுத்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாக பணிகளில் பிசியாக இருக்கும் வெற்றிமாறன், வாடிவாசல் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷை வைத்து இயக்க உள்ளார்.  ஏற்கனவே, தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  இதுமட்டும் இல்லாமல், பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இலான் இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று நடிகர் தனுஷ் மதுரையில் சாதாரண சாலையில் ஜாக்கிங் செய்த தனுஷின் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த வீடியோ தற்போது வரை வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ள சூப்பர் ஹிட் திரைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News