தோனி தயாரிக்கும் தமிழ் படத்தில் விஜய் ஹீரோ இல்லையாம்; பிக்பாஸ் பிரபலத்துக்கு ஜாக்பாட்

தோனி புதிதாக தொடங்கியிருக்கும் சினிமா தயாரிப்பு நிறுவனம் சார்பில் விஜய் அல்லது ரஜினி நடிக்கக்கூடும் என தகவல் வெளியான நிலையில், அவர்கள் இருவருமே இல்லாமல் பிக்பாஸ் பிரபலம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 29, 2022, 02:11 PM IST
  • தோனியின் சினிமா தயாரிப்பு நிறுவனம்
  • தோனி எண்டர்டெயின்மென்ட் தமிழ் படம்
  • பிக்பாஸ் பிரபலம் முதல் படத்தில் ஹீரோ
தோனி தயாரிக்கும் தமிழ் படத்தில் விஜய் ஹீரோ இல்லையாம்; பிக்பாஸ் பிரபலத்துக்கு ஜாக்பாட் title=

கிரிக்கெட் உலகில் கோலோச்சிய தோனி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிஸ்னஸில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்த அவர், இப்போது புதிதாக சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். தோனி எண்டர்டெயின்மென்ட் என பெயரிடப்பட்டிருக்கும் அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படத்தில் விஜய் அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நடிக்கக்கூடும் என தகவல் பரவியது. இதற்கு முக்கிய காரணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்தபோது விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருந்தார் தோனி. 

மேலும் படிக்க | கமலால் கடனாளி ஆனேனா?... முற்றுப்புள்ளி வைத்த லிங்குசாமி

இதனால், அவர்கள் படங்களில் இணைய வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது. பின்னர் தோனி சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதாக அறிவிப்பு வெளியானவுடன், அவர்களை தங்கள் நிறுவனத்தின் முதல் படத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்ற தகவலும் பரவியது. ஆனால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தோனி தயாரிக்கும் முதல் படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க இருக்கிறாராம். விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் அவர், தோனி தமிழில் தயாரிக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம்.

படத்தை ரமேஷ் தமிழ் மணி இயக்க இருக்கிறார். ஹீரோயினாக பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அவருக்கும் தோனி தயாரிக்கும் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துவிட்டதால் அடுத்தக்கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | பிரமாண்டமாக உருவாகும் 'டபுள் எக்ஸ்எல்' : பாலிவுட்டில் கால் பதிக்கும் நடிகர் மஹத்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News