இனி என்னுடைய ஆட்டம் ஆரம்பம் - இயக்குனர் கார்த்திக் நரேன் ட்வீட்

தன் மனம் தளரவிடாமல் தனுஸை வைத்து மாறன்என்ற பெயரில் தனது அடுத்த படத்தை ஆரம்பித்தார் கார்த்தி நரேன். சமீபத்தில் இந்த படத்தின் பரஸ்ட் லுக் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jul 30, 2021, 08:12 PM IST
  • தனது முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.
  • தியேட்டரில் ரிலீஸ் ஆகி மிகவம் மோசமான விமர்சனங்களுடன் படுதோல்வி அடைந்தது.
  • "மாறன்" படத்தின் மூலம் தனது திரையுலக பயனத்தை வெற்றிகரமாக மாற்றுவாரா?
இனி என்னுடைய ஆட்டம் ஆரம்பம் - இயக்குனர் கார்த்திக் நரேன் ட்வீட்

தனது முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் புது முக இயக்குனர் கார்த்திக் நரேன் (Karthick Naren). தனது 22 வயதிலேயே "துருவங்கள் பதினாறு" (Dhuruvangal Pathinaaru) என்னும் மிக சிக்கலான ஸ்கீரீன் பிளே கொண்ட படத்தினை எடுத்து அசத்தினார். இப்படம் அவருக்கு மிக பெரிய பெயரை தமிழ் சினிமாவில் வாங்கி கொடுத்தது.

துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றிக்கு பின் அரவிந்சாமியை வைத்து நரகாசுரன் (Naragasooran) என்னும் தனது இரண்டாவது படத்ததை ஆரம்பித்தார் கார்த்திக் நரேன். இவரும் கவுதம் வாசுதேவ் மேனனும் சேர்ந்து தயாரித்த இந்த படம் முழுவதும் முடிவடைந்த நிலையில் பணப்பிரச்சனையில் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போகிறது. ஓடிடியில் இப்படம் விரைவில் வெளியாகும் என்று கடந்த ஒரு வடங்களுக்கு மேலாக செய்திகள் வந்து கொண்டிருந்தாலும் இன்று வரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை. 

பின்பு அருண் விஜய்யை வைத்து மாபியா (Mafia: Chapter 1) என்ற படத்தை ஆரம்பித்தார் கார்த்திக் நரேன். இவரது முதல் படம் மிகப்பெரிய ஹட்.  இரண்டாவது படம் ரிலீஸ் ஆகாததால் மாபியா படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்தியது. ஆனாலும் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி மிகவம் மோசமான விமர்சனங்களுடன் படுதோல்வி அடைந்தது. ஆனாலும் தன் மனம் தளரவிடாமல் தனுஸை வைத்து மாறன் (Maaran) என்ற பெயரில் தனது அடுத்த படத்தை ஆரம்பித்தார் கார்த்தி நரேன். சமீபத்தில் இந்த படத்தின் பரஸ்ட் லுக் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் ஹீட்டிங் ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. 

ALSO READ | Dhanush 43 First Look: தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

இந்நிலையில் இன்று தனது டிவிட்டர் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆன "சார்பட்டா" (Sarpatta Parambarai) படத்தில் இருந்து ஒரு வசனத்தை பகிர்ந்துள்ளார் கார்த்திக் நரேன்.  "போய் சொல்லு, இனி இது என்னுடைய நேரம்" என்று உள்ள அந்த வசனம் நான் திரும்பி வந்துடேன், இனி என் ஆட்டம் ஆரம்பம் என்று அனைவருக்கும் சொல்லும் படியாக இந்த வசனம் கொண்ட காட்சியை பகிர்ந்துள்ளார். "மாறன்" படத்தின் மூலம் தனது திரையுலக பயனத்தை வெற்றிகரமாக மாற்றுவார் என்று அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

ALSO READ | "நரகாசூரன்" படத்தின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி; OTT தளத்தில் படம் வெளியாகிறது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News