Dhanush 43 First Look: தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Jul 28, 2021, 11:14 AM IST
Dhanush 43 First Look: தனுஷ் 43 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் (GV Prakash) இசையமைக்கிறார். தனுஷ் 43 (Dhanush) படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

ALSO READ | Dhanush 43: தனுஷ் 43 படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

இந்தப் படத்துக்குத் தலைப்பை இறுதி செய்யாமல் படப்பிடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வந்தது படக்குழு. இந்நிலையில் தற்போது இன்று தனுஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

 

 

இந்த படத்திற்க்கு மாறன் (Maaran) எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. தற்போது ஹைதராபாத்தில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை முடித்துவிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் தனுஷ் கவனம் செலுத்துவார்.

ALSO READ | Jagame Thandhiram: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் கெத்துகாட்டும் ஜகமே தந்திரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News