Pyaar Prema Kaadhal: ஜூன் 9 யுவன் இசையில் அடுத்த டீர்ட்!

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Last Updated : Jun 7, 2018, 01:17 PM IST
Pyaar Prema Kaadhal: ஜூன் 9 யுவன் இசையில் அடுத்த டீர்ட்! title=

இளன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இதில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டது என்று இயக்குனர் இளன் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்து வருகிறார். அதேநேரத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘YSR ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். 

ஏற்கெனவே இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் மற்றும் High On Love என்ற பாடல் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி உள்ளது. 

இந்நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த சிங்கிள் பாடலான “டோப் ட்ராக்” வரும் ஜூன் 9 ரிலீசாகிறது. பாடல் வரிகளை மோஹனரஞ்சன் எழுதியுள்ளார். யுவன் இசை அமைத்து பாடியும் உள்ளார்.

Trending News