கொரோனா இரண்டாவது அலை; சிக்கலில் “அண்ணாத்தே”; படபிடிப்பு ரத்தாகிறதா?

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை போல் தோன்றிய நிலையில், ஹைதராபாத்தில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு படபிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, முக்கிய படங்களின் படபிடிப்புகள் அடுத்ததடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2021, 06:30 PM IST
  • 'அண்ணாத்தே' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, .
  • சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார்.
  • கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை தொடங்கி விட்ட நிலையில், ரஜினிகாந்தின் அண்ணாத்தே படம் மீண்டும் சிக்கலில் உள்ளது.
கொரோனா இரண்டாவது அலை; சிக்கலில் “அண்ணாத்தே”;  படபிடிப்பு ரத்தாகிறதா?

 

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முதல் கட்ட படபிடிப்பு நடைபெற்ற நிலையில், முன்னதாக படப்பிடிப்புக் குழுவினரில் எட்டு உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்தே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. உடல் நல காரணங்களை மேற்கோள் காட்டி, நெடுநாட்களாக கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்க போவதாக கூறி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அப்போது அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில், சமீபத்தில்  அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியானது. தற்போது, கொரோனா வைரஸ் தொற்று  இரண்டாவது அலை தொடங்கி விட்ட நிலையில், ரஜினிகாந்தின் அண்ணாத்தே படம் மீண்டும் சிக்கலில் உள்ளது. 

ALSO READ | ரஜினிகாந்தின் 'அண்ணாத்தே” படபிடிப்பு விரைவில் சென்னையில்..!!!

கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை போல் தோன்றிய நிலையில், ஹைதராபாத்தில், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு படபிடிப்பை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது, முக்கிய படங்களின் படபிடிப்புகள் அடுத்ததடுத்து ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்பட ஷூட்டிங்கும் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
'அண்ணாத்தே' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, மேலும் பல பிரபலமான நடிகர்களும் உள்ளனர். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, கோயெர்ஜ் மரியன் மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் டி இமான் இதற்கு இசையமைக்கிறார். இந்த படம் கிராமப்புறத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு படம் என்று கூறப்படுகிறது.

படபிடிப்பு குழு பெரும்பாலும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் (EVP film city) படப்பிடிப்பில் நடக்கும் என கூறப்பட்டது. அங்கு தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய  அளவில் படபிடிப்பிற்கான செட்டிங்குகளை அமைத்துள்ளனர், ஹைதராபாத் தவிர படப்பிடிப்பு கோவை மற்றும் பொள்ளாச்சியைச் சுற்றி நடக்கும் என கூறப்பபட்டது.

ALSO READ | Rajinikanth-இன் அண்ணாத்தே படபிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR  

 

More Stories

Trending News