மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!

ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா மற்றும் கமல்ஹாசன் என முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் ‘அவள் அப்படித்தான்’. இத்திரைப்படத்தை ரீமேக் செய்வது குறித்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் திட்டமிட்டுள்ளார்.

Updated: Jun 1, 2020, 12:58 PM IST
மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!

ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா மற்றும் கமல்ஹாசன் என முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி கண்ட திரைப்படம் ‘அவள் அப்படித்தான்’. இத்திரைப்படத்தை ரீமேக் செய்வது குறித்து இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் திட்டமிட்டுள்ளார்.

1978-ம் ஆண்டு ருத்ரய்யா இயக்கத்தில் ரஜினி, கமல், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'அவள் அப்படித்தான்'. இந்நாள் வரையிலும் இந்த திரைப்படத்திற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. காரணம், இந்த படத்தில் சொல்லப்பட்ட கருத்து. பல்வேறு முன்னணி இயக்குநர்கள் கூட இந்தப் படம் குறித்து மிகவும் புகழ்ந்து பேசியுள்ளனர். ஊடகம் சார்ந்த படிப்பை பயிலும் மாணவர்களுக்கும் இந்த திரைப்படத்தை பார்க்க ஆசிரியர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற இந்த திரைப்படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ். 

READ | திரைப்படங்கள், சீரியல் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்க மகாராஷ்டிரா அரசு அனுமதி...

ஸ்ரீப்ரியா வேடத்தில் நடிக்க இயக்குனர் ஸ்ருதிஹாசனை அணுகியதாகவும், துல்கர் சல்மான் மற்றும் சிம்பு முறையே கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மனம்திறந்த இயக்குனர்., “நான் ஒரு சமூக ஊடக சவாலை ஏற்றுக்கொண்டு, அமெரிக்கரான என் மருமகளுக்கு பதிலளித்தபோது தொடங்கியது, அவள் அப்படிதான் இன்றும் என்னுடன் ஒத்திருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தேன் மற்றும் ஸ்ருதியையும் இத்தோடு இணைத்திருந்தேன்” இருப்பினும், அவள் அப்படிதான் பதிப்புரிமை யார் வைத்திருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியாததால் உரிமை யாரிடம் இருக்கிறது என்பதற்கான தேடலில் இறங்கியுள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

“ருத்ரையா (திரைக்கதை எழுத்தாளர்) இப்போது இல்லை, அமெரிக்காவில் இருக்கும் அவரது மகளுக்கும் இது பற்றி தெரியும் என்று நான் நினைக்கவில்லை.நான் அந்த திரைப்படத்தை, அப்படியே ப்ரேம்-பை-ப்ரேமாக எடுக்க மாட்டேன், ஆனால் திரைப்படத்தின் கருவில் எந்த மாறுதலும்  இல்லாமல், கதையம்சம் மாறாமல் எடுக்க விரும்புகிறேன்" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையின் எம்.ஜி.ஆர் அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் மாணவர்களுடன் இணைந்து ராக மஞ்சரி தயாரித்த இந்த திரைப்படத்தை இயக்குநர் அனந்து இயக்கினார். முதலில் இன்ஸ்டிடியூட் மாணவர் ஒருவர் தான் இந்த திரைப்படத்தை இயக்கினார். 

READ | மீண்டும் உருவாகும் ‘அவள் அப்படித்தான்’; ஸ்ருதி, சிம்பு மற்றும் துல்கர் உடன் பேச்சுவார்த்தை!

சோமசுந்தரேஷ்வர் மற்றும் அனந்து இணைந்து எழுதிய இந்த திரைப்படத்திற்கு ருத்ரைய்யா மற்றும் வண்ண நிலவன் திரைக்கதையுடன் எழுதியுள்ளார்கள். நல்லசாமி மற்றும் எம்.என்.ஞானசேகரன் ஆகியோர் கேமராமேன்களாக இந்த திரைப்படத்தில் பணியாற்றினார்கள்.    இளையராஜாவின் இசையில், பாடல் வரிகளை கங்கை அமரன் மற்றும் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் எழுதியுள்ளனர்

தற்போது 'ப்ளான் பண்ணி பண்ணனும்' திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள பத்ரி, இத்திரைப்படத்தை தொடர்ந்து 'அவள் அப்படித்தான்' ரீமேக்கை இயக்க முடிவு செய்துள்ளார். இந்த ரீமேக்கிற்கு தயாரிப்பாளர் முடிவாகிவிட்டதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொழியாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்