29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்த மனைவி சாய்ரா

Saira Banu Announced Separation: ரசிகர்கள் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்தது 29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை. பிரிவதாக அறிவித்த மனைவி சாயிரா பானு. 

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 19, 2024, 11:34 PM IST
29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்த மனைவி சாய்ரா

AR Rahman Saira Banu Latest News: ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு திருமணமான 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்ததாக அறிவித்துள்ளார் எனக் கூறியுள்ளார். சாய்ரா பானு ஏ. ஆர். ரஹ்மானை பிரிய என்ன என்பதை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?

ஏ.ஆர். ரஹ்மானின் மனைவி சாய்ரா அவரது வழக்கறிஞர் வந்தனா ஷா மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமணமாகி பல வருடங்கள் கழித்து, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் உணர்ச்சி மிகுந்த கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டு உள்ளது. ஒருவரையொருவர் ஆழமாக நேசித்த போதிலும், தம்பதிகள் இருவரும் தங்கள் வாழ்வில் பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கிடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளது என்பதை அறிந்துக்கொண்டார். 

இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் அவர்களை இணைக்க முடியாது. வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா தெரிவித்துள்ளார். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சாய்ரா எதிர்பார்க்கிறார். ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்திற்குள் செல்ல இருக்கிறார்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

ஏ. ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு திருமணம் எப்பொழுது நடந்தது?

இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கும், சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அழகான ஜோடி எனக் கொண்டாடப்பட்ட இவர்களின் திருமண வாழ்வு 29 ஆண்டுக்கு பிறகு முடிவுக்கு வருவதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார் சாய்ரா பானு.

ஏ. ஆர். ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதியருக்கு எத்தனை குழந்தை?

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு தம்பதியருக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஏ. ஆர். ரஹ்மானின் மகன் ஆமீன் என்ன சொன்னார்?

ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு பிரிவு குறித்து, அவர்களின் மகனான ஆமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த நேரத்தில் எங்களது ப்ரைவசிக்கு அனைவரும் மரியாதைக் கொடுக்க வேண்டிக்கொள்கிறேன்" எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும் படிக்க - முக்கிய செய்திகள்: மனைவியை பிரியும் ஏ.ஆர்.ரஹ்மான், அச்சுறுத்தம் ரஷ்யா, ஐபிஎல் மெகா ஏலம் அப்டேட்

மேலும் படிக்க - ரஹ்மானுக்கு நடந்தது இளையராஜாவுக்கும் நடக்குமோ...! கான்செர்ட்டுக்கு ஆப்பா? 

மேலும் படிக்க - ஏ.ஆர்.ரஹ்மானின் இளையமகள் செய்த சாதனை! இசைத்துறையில் அல்ல-‘இந்த’ விஷயத்தில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

...Read More

Trending News