வரலக்ஷ்மி புதிய படம் குறித்து முக்கிய அறிவிப்பு!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்க உள்ள புதிய படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 5, 2019, 11:02 AM IST
வரலக்ஷ்மி புதிய படம் குறித்து முக்கிய அறிவிப்பு! title=

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்க உள்ள புதிய படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் கைவசம் தற்போது ‘கன்னி ராசி, சக்தி, அம்மாயி, நீயா 2, பாம்பன், வெல்வெட் நகரம், காட்டேரி, ராஜபார்வை, கன்னித்தீவு’ என 9 படங்கள் உள்ளது.

இந்நிலையில், தற்போது நடிகை வரலக்ஷ்மி மற்றுமொரு புதிய படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘டேனி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் வரலக்ஷ்மி போலீஸாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் சந்தான மூர்த்தி இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ‘ஜெயம்’ ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நடிகை வரலக்ஷ்மிக்கு ‘மக்கள் செல்வி’ என்ற பதிய பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

Trending News