Arjun Das Salary For Giving Voice To Mufasa : மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படம், தி லயன் கிங். இதன் முன்கதையாக முஃபாசா: தி லயன் கிங் படம் இன்று வெளியாகி இருக்கிறது. இதில் ஹீரோவுக்கு வாய்ஸ் கொடுக்க அர்ஜுன் தாஸ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?
ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் அதிக அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பது பலரும் அறிந்த கதை. ஆனால், ஹாலிவுட் குறித்த புரிதலே இல்லாதவர்களுக்கு கூட ஒரு சில படங்களின் பெயர்களின் பெயரை கூறினால் தெரியும். அப்படி, அனைவருக்கும் தெரிந்த ஒரு பெயர் லயன் கிங். இந்த படத்தின் முன் கதையான முஃபாசா: தி லயன் கிங் படம் வெளியாகி இருக்கிறது.
முஃபாசா: தி லயன் கிங்
தி லயன் கிங் படம் அனிமேஷனாகவும்-கார்டூனாகவும் இரண்டு வகைகளில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில், சிம்பாதான் (குட்டி சிங்கம்) வளர்ந்த பிறகு ஹீரோவாக மாறும். இதன் தந்தை முஃபாசா இறந்த பின்பு இதன் கதை தொடங்கும். இப்படத்தின் முன் கதையாக உருவாகியிருப்பதுதான் முஃபாசா: தி லயன் கிங். இந்த படத்தில் சிம்பாவின் தந்தை முஃபாசாவின் கதை காண்பிக்கப்படுகிறது. இந்த படத்தில் கியாரா, முஃபாசா, நாலா, கிரோஸ், சிம்பா, ரஃபிகி உள்ளிட்டவை முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றன.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அர்ஜுன் தாஸ். இவரை பற்றி நினைத்தவுடன், இவரது முகம் பலருக்கு நினைவிற்கு வருகிறதோ இல்லையாே, பலருக்கு இவர் குரல் நினைவிற்கு வந்து விடும். இவர் அடித்தொண்டையில் இருந்து ஹெலோ சொன்னாலே பெண்கள் மயங்கிவிடுவர். இவர்தான் தற்போது முஃபாசா: தி லயன் கிங் படத்தில் ஹீரோவிற்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார்.
மக்கள் வரவேற்பு:
அர்ஜுன் தாஸ் மட்டும்மல்ல இந்த படத்தில் அசோக் செல்வனும் டாகா எனும் கதாப்பாத்திரத்திற்கு வாய்ஸ் கொடுத்திருக்கிறார். அதே பாேல டிமான் அண்ட் பூம்பாவிற்கு சிங்கம் புலி மற்றும் ரோபா சங்கர் ஆகியோர் வாய்ஸ் கொடுத்துள்ளனர். நடிகர் நாசர், கிரோஸ் என்ற பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்த வீடியோக்களும் டிரைலரும் வெளியான போது பலரும் இதற்கு வரவேற்பு அளித்திருக்கின்றனர்.
அர்ஜுன் தாஸின் சம்பளம்:
நடிகர் அர்ஜுன் தாஸ், துணை கதாப்பாத்திரங்கள் மூலமாக கோலிவுட்டிற்குள் நுழைந்தார். இதையடுத்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது அவர் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முஃபாசா படத்திற்கு அவர் வாய்ஸ் கொடுத்திருப்பதற்கு எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. இவர், இதற்காக சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வாங்கியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
விமர்சனம்..
முஃபாசா படத்திற்கு தமிழ் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். ஒரு சிலர், படத்தை அர்ஜுன் தாஸிற்காக பார்த்தனர். இதை பார்த்தவர்கள், படம் நன்றாக இருப்பதாகவும் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களுக்கும் இது பிடிக்கும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு?
மேலும் படிக்க | ‘மாவீரன்’ படத்தில் குரல் கொடுக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ