Audio: Super Star-ன் Super செயல்! COVID Positive ரசிகருக்கு அனுப்பினார் Audio Message!!

ரஜினி மீது அன்பும், பாசமும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள உள்ளங்கள் ரஜினி ரசிகர்கள் அனைவரும். அப்படிப்பட்ட ஒரு ரசிகர்தான் முரளி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2020, 05:03 PM IST
  • COVID-19-க்கு நேர்மறையாக பரிசோதிக்கப்பட்ட முரளி ரஜினிக்கு ட்வீட் செய்தார்.
  • சூப்பர் ஸ்டார் ரஜினி, ரசிகருக்கு விரைவாக ஒரு ஆடியோ செய்தி மூலம் பதில் அளித்தார்.
  • ரஜினிகாந்தின் இந்த மென்மையான சைகையை அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.
Audio: Super Star-ன் Super செயல்! COVID Positive ரசிகருக்கு அனுப்பினார் Audio Message!! title=

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு (Super Star Rajinikanth) ரசிகர்களுக்கா பஞ்சம்? ஆனால் இவர்களை ரசிகர்கள் என்று கூறுவது மிகவும் சாதாரணமாகி விடும். ரஜினி மீது அன்பும், பாசமும், எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் கொண்டுள்ள உள்ளங்கள் ரஜினி ரசிகர்கள் (Rajini Fans) அனைவரும்.

அப்படிப்பட்ட ஒரு ரசிகர்தான் முரளி.

COVID-19-க்கு நேர்மறையாக பரிசோதிக்கப்பட்ட அவர் முன்பு ட்வீட் செய்து, தனது இறுதி ஆசை தன் திரை நாயகனைக் காண வேண்டும் என்பதுதான் என்று கூறியிருந்தார். ரஜினி தன் ரசிகர்களை, வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், 25000 ரூபாய் தனிநபர் வருமானம் என்ற நிலைக்கு அவர்களை உயர்த்த வேண்டும் என்றும் அவர் ரஜினியிடம் கோரியிருந்தார்.

ஒரு ஆன்மீகத் தலைவராகவும் தனது ரசிகர்களை வழிநடத்துமாறு அவர் ரஜினியைக் கேட்டுக்கொண்டார். மனதை உருக்கும் ஒரு ட்வீட்டில், 2021-ல் வரவிருக்கும் தேர்தல்களில் ரஜினி வெற்றி பெற உழைக்க தான் இருக்க மாட்டேன் என்றும் அவர் வருந்தியிருந்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு (Super Star Rajinikanth), இதற்கு விரைவாக ஒரு ஆடியோ செய்தி (Audio Message) மூலம் பதில் அளித்தார். தனது ரசிகருக்கு ரஜினி அனுப்பிய இந்த ஆடியோ செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

அந்த ஆடியோ செய்தியில், சூப்பர் ஸ்டார், "நீங்கள் விரைவாக குணமடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். பயப்பட வேண்டாம், நீங்கள் நன்றாக இருப்பீர்கள். நான் ஆண்டவனிடம் உங்களுக்காக பிரார்த்தனை செய்வேன்" என்று கூறியுள்ளார்.

"நீங்கள் குணமடைந்த பிறகு தயவுசெய்து உங்கள் குடும்பத்தினருடன் எனது வீட்டிற்குச் வாருங்கள். நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்" என்று கூறி ரஜினிகாந்த் செய்தியை முடித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ரஜினியின் செய்தி வந்த பிறகு, "ரஜினிகாந்தின் ஆசீர்வாதத்துடன்", தான் எதிர்மறையாக சோதிக்கப்பட்டிருப்பதாக முரளி கூறியுள்ளார். தன் ஹீரோவின் குரல் கேட்டவுடன், விரைவில் நோயிலிருந்து குணமடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை தனக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ரஜினிகாந்தின் இந்த மென்மையான சைகையை அவரது ரசிகர்கள் வரவேற்றனர். ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் ஹீரோவைப் புகழ்ந்த வண்ணம் உள்ளனர்.

ALSO READ: 'Bigil' ஃபர்ஸ்ட் லுக்கிற்குப் பிறகு, அதிகம் ரீட்வீட் ஆன நடிகர் Vijay இன் இந்த செல்பி...!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News