SK 15: சிவகார்த்திகேயன் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது!

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்துக்கு 'ஹீரோ' என்று தலைப்பிட்டு, படப்பணிகள் இன்றுதொடங்கப்பட்டுள்ளன.

Last Updated : Mar 13, 2019, 11:16 AM IST
SK 15: சிவகார்த்திகேயன் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது! title=

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்துக்கு 'ஹீரோ' என்று தலைப்பிட்டு, படப்பணிகள் இன்றுதொடங்கப்பட்டுள்ளன.

மிஸ்டர்.லோக்கல்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் பிசியாக இருக்கிறார். இதுதவிர ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்த நிலையில், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
 
இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார். 
 
இந்தநிலையில், இந்த படத்தின் பணி இன்று (மார்ச் 13) படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 'ஹீரோ' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. 

 

 

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் அர்ஜுன் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் இசையமைக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். 

Trending News