தல 60-ன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. H.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2021, 11:06 PM IST
தல 60-ன் லேட்டஸ்ட் அப்டேட் இதோ! title=

Ajith நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. H.வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இப்படத்தில் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் வலிமை படம் குறித்த தகவல்களை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். 

போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இவரது இசையில் சமீபத்தில் 'நாங்க வேற மாதிரி' என்ற பாடல் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் 'வலிமை' படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு ரஷ்யாவிற்கு சென்றிருந்தது.அதில் அஜித் பங்கேற்கும் மிகப்பெரிய பைக் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது இந்த படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மேலும் வலிமை படக்குழு மாஸ்கோவில் இருந்து சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் செய்தி வட்டாரங்களில்  தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G 

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News