உலக நாயகன் கமலுக்கு பிறகு Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்கும் தளபதி விஜய்?

"பிக் பாஸ்" தயாரிப்பு நிறுவனம் எண்டெமால் ஷைன் இந்தியாவுடன் ஒரு புதிய  ஒப்பந்தத்தில் தளபதி விஜய் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: May 30, 2020, 05:51 PM IST
உலக நாயகன் கமலுக்கு பிறகு Bigg Boss நிகழ்ச்சியில் பங்கேற்கும் தளபதி விஜய்?
Photo: Zee Network

சென்னை: கோலிவுட்டின் ஒரு ஹாட் நியூஸ்  வெளியாகியுள்ளது. அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இந்த செய்தி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை எப்போதுமே தளபதி விஜய்யின் அடுத்த பரபரப்பு என்ன? என்ற கேள்வியுடன் செய்தி ஒன்று உலா வரும். அதில் ஏதாவது ஒரு பரபரப்பும் இருக்கும். இது வழக்கமாக நடப்பதுதானே.. அதேபோல தான் தற்போது ஒரு செய்தி தமிழ் சினிமாவில் பரவி வருகிறது. 

"பிக் பாஸ்" தயாரிப்பு நிறுவனம் எண்டெமால் ஷைன் இந்தியாவுடன் ஒரு புதிய  ஒப்பந்தத்தில் தளபதி விஜய் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

அதே  சமயம் இது "தளபதி 66" பற்றியதாக  இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எண்டெமால் ஷைன் நிறுவனம் ஸ்ரீ தேனாண்டல் பிலிம்ஸுடன்  இணைந்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்க உள்ளது என்றும் சில வட்டாரங்கள் கூறுகின்றன. 

"பிக் பாஸ்" தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவுக்குள் நுழையும் எண்ணத்தில் இருப்பதற்காகவும், களமிறங்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து விஜய்யுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த ஒப்பந்தம் நிறைவேறுமா என்று உறுதியான தகவல்கள் வெளிவர பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் கூட ஆகலாம்.
 
இதுத்தவிர விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய, புதிய திரில்லர் திரைப்படமான "மாஸ்டர்" வருகையை எல்லோரும் ஆவலுடன்  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்கள் பட வெளியீட்டு நாள் எப்போது என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். அது மட்டுமா, விரைவில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 'தளபதி "65" படத்திற்காக அவர் சன் பிக்சர்ஸுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.

(மொழியாக்கம் – தெய்வ பிந்தியா.த)