டாக்டர் படத்தில் எனக்கு 10 டயலாக்தான் – சிவகார்த்திகேயன்

“டாக்டர்” திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாவதை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 2, 2021, 01:19 PM IST
டாக்டர் படத்தில் எனக்கு 10 டயலாக்தான் – சிவகார்த்திகேயன் title=

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள "டாக்டர்" திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது. உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில் நடிகர் சுனில் ரெட்டி பேசியதாவது, இந்தப்படத்தில் ரௌடியாக நடிக்கிறாயா என்று இயக்குநர் கேட்டார். நான் தயக்கத்தில் தான் ஓகே என்றேன். தாடி வளர்க்க சொன்னார் வளர்த்துக்கொண்டே இருந்தேன். படத்தில் மிக அழகாக என்னை பயன்படுத்தியுள்ளார். நான் பார்க்க தான் டெரர், உண்மையில் மிக பயந்த சுபாவம் தான். படத்தின் வில்லனான நடிகர் வினய் பேசுகையில், நெல்சன், சிவா உங்கள் இருவருக்கும் நன்றி. இந்த 15 வருடத்தில் 15 படங்கள் பன்ணியிருக்கிறேன். அனைவருடனும் இன்றும் நல்ல உறவு இருக்கிறது. இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு கனவு நிறைவேறியது போலவே இருந்தது. இந்தப்படம் முழுதுமே ஒரு இனிமையான பயணமாக இருந்தது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன் நன்றி.

dco

டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் பேசியதாவது, முதலில் சிவகார்த்திகேயன் வழக்காமாக அவரது படங்கள் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரிடம் பேசி தான் இப்படம் எடுக்கலாம் முடிவு செய்தோம். அவரிடம் இரண்டு ஐடியா சொன்னேன் இரண்டுமே நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள் என்றார். என் கடமை அதிகமாகிவிட்டது. படம் எடுக்க ஆரம்பித்த இரண்டு வாரத்தில் இது நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயனே படத்தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. என்னை கேள்வி கேட்காமல் முழு சுதந்திரம் இருந்தது. வினய் பார்த்து பழகும் போது அப்பாவியாக இருந்தார் ஆனால் படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அனிருத்தை வைத்து தான் திரைக்கதையே எழுதுவேன் அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது. படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

doc

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்தப்படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார் என்று தோன்றியது. வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டு தான் நின்றேன். மனுஷன் மிகப்பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது. ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். இந்தப்படம் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும். அக்டோபர் 9 ந்தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ALSO READ ஓடிடியில் வெளியாகிறதா காத்து வாக்குல ரெண்டு காதல்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News