ஆதியை அவாய்ட் செய்யும் பாரதி-சாரதாவிற்கு சந்தேகம்..இதயம் சீரியல் இன்றைய அப்டேட்!

Idhayam Serial Update Today: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும்  ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். 

Written by - Yuvashree | Last Updated : Jan 30, 2024, 02:26 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சீரியல், இதயம்.
  • இதில் ஆதியை அவாய்ட் செய்கிறார் பாரதி.
  • இந்த எபிசோடில் நடக்க இருப்பது என்ன?
ஆதியை அவாய்ட் செய்யும் பாரதி-சாரதாவிற்கு சந்தேகம்..இதயம் சீரியல் இன்றைய அப்டேட்! title=

Idhayam Zee Tamil Serial Update Today: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாரதி போட்டோவை கிழித்து போட்டதால் முதல் முறையாக உன்னை வெறுக்கிறேன் என்று ஆதி சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பாரதி ஆதியை மொத்தமாக அவாய்ட் செய்ய அதனால் ஆதி மனமுடைந்து எதிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருக்கிறான், வீட்டிலும் யாரிடமும் எதுவும் பேசாமல் எதையோ பறி கொடுத்தது போலவே இருக்க சாரதா ஏன் இவன் இப்படி இருக்கிறான்? அப்படி அந்த பாரதியிடம் என்ன இருக்கு என்று கடுப்பாகிக்கிறாள்.

மேலும் படிக்க | மயக்க மருந்தை யார் குடிச்சா என்ன? ரத்னா வருவாளா? அண்ணா சீரியல்

சாரதா ஆதியை சாப்பிட கூப்பிட்டும் அவன் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லி விடுகிறான். இதனால் சாரதா ஆதியிடமே பேசி விடலாம் என்று முடிவெடுத்து எதுவும் தெரியாதது போல பேசி போட்டு வாங்க முடிவெடுக்கிறாள். ஆதியை கூப்பிட்டு நீ காதலிக்கிற பொண்ணு யார்? சொல்லு பா அவங்க வீட்டிற்கு போய் பேசலாம் என்று சொல்ல ஆதி இந்த கல்யாணம் நடக்காது மா, அவ என்னை வேண்டான்னு சொல்லிட்டா என்று சொல்கிறான்.

கடைசி வரை அந்த பாரதி தான் என்று சொல்லலாம் மறைத்து விடுகிறான் ஆதி, இதனால் சாரதா ஒருவேளை நாம பேசியதை ஆதியிடம் சொல்லிட்டாளோ என்று பாரதி மீது சந்தேகம் கொள்கிறாள். இப்படியான நிலையில் எடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: பெயிலில் வெளியே வரும் சீதா.. அர்ச்சனாவை ஏற்றி விட்ட கல்பனா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News