Idhayam Serial May 31: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘இதயம்’ சீரியல்.
இதயம் எபிசோட் அப்டேட்:
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தமிழ்க்கு அடிபட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு கிளம்பும் போது எதிரே ரத்னம் வர இவர்கள் குழந்தையை கொண்டு போய் ரூமுக்குள் மறைத்து வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வீட்டிற்கு வந்த ரத்னம் இங்க ஒரு கல்யாணத்துக்கு வந்ததாகவும் பாரதியையும் குழந்தையையும் பார்த்திட்டு போக வந்ததாக சொல்ல இவர்கள் அவங்க கோவிலுக்கு போய் இருக்காங்க என்று சொல்லி சமாளித்து வர லேட்டாகும் என்று சொல்லி அனுப்ப முயற்சி செய்ய அவங்க வரட்டும் பார்த்திட்டு போறேன் என்று காத்திருக்கின்றனர். கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைக்கப்பட்ட குழந்தைக்கு தலையில் ரத்தம் கசிய தொடங்குகிறது.
ரத்னம் பாரதிக்கு போனை போட போன் ரூமில் ரிங்காக ரத்னம் எழுந்து ரூமுக்குள் சென்று பார்க்க அப்போது அவரது பாக்கெட்டில் இருந்து பணம் கீழே விழ அதை எடுக்க குனிந்தவர் ரத்த வெள்ளத்தில் இருக்கும் தமிழை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டு ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார். டாக்டர் குழந்தைக்கு சீரியஸ் கண்டிஷன், நியூராலஜி டாக்டரை வர சொல்லி இருப்பதாக அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
மேலும் படிக்க | மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினர் மீது மோசடி வழக்கு
வாசு ஆத்மா டாக்டராக முகத்தை மறைத்தபடி வர ரத்னம் என் பேத்தியை காப்பாத்துங்க என்று கையை பிடித்து கெஞ்ச எதுவும் பேசாமல் உள்ளே சென்ற வாசு குழந்தையிடம் பேச தமிழ் கண்ணை திறந்து பார்த்து அப்பா என்று கூப்பிடுகிறாள், அடுத்து போலீஸ் ஹாஸ்பிடலுக்கு வர குழந்தைக்கு என்னாச்சு? என்ன நடந்துச்சு என்று விசாரிக்க இவங்க தான் குழந்தையை கொல்ல பார்த்தாங்க என்று ரத்னம் சாரதா குடும்பத்தை சாடுகிறார்.
பிறகு உண்மையான டாக்டர் ஹாஸ்பிட்டலுக்கு வர அப்போ இதுக்கு முன்னாடி வந்தது யார் என்று குழப்பம் அடைகின்றனர், பிறகு டாக்டர் குழந்தையை பார்த்து விட்டு குழந்தைக்கு ஒரு பிரச்னையும் இல்ல ஆல்ரைட் என்று சொல்ல ரத்னம் இனிமே என் பேத்தியை உங்க கூட அனுப்ப மாட்டேன் என்று சாரதா குடும்பத்தை துரத்தி விடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மேலும் படிக்க | இதயம்: ஆட்டத்தை ஆரம்பித்த பாரதி.. ஸ்வேதால் மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கும் தமிழ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ