ஏய் தாய் கிழவி! குடிகாரனுக்கு கட்டி கொடுத்து பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பாக்கறியா?

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி வாசுவாக மாறி ரத்னத்தை அப்பா என அழைத்து அல்வாவை எடுத்து வந்து கொடுக்க, வாசு வாங்கி கொடுக்கும் அதே ஆல்வா என்பதால் எமோஷனான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 20, 2024, 01:36 PM IST
  • பாரதி கல்யாணத்தில் நடக்க போவது என்ன?
  • வாசு போல் பேசி மரகதத்தை மிரள விட்ட ஆதி...
  • இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ஏய் தாய் கிழவி! குடிகாரனுக்கு கட்டி கொடுத்து பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பாக்கறியா?  title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஆதி வாசுவாக மாறி ரத்னத்தை அப்பா என அழைத்து அல்வாவை எடுத்து வந்து கொடுக்க, வாசு வாங்கி கொடுக்கும் அதே ஆல்வா என்பதால் எமோஷனான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது நலங்கு வைப்பதற்காக பாரதிக்கு லதா அலங்காரம் செய்து அழைத்து வர பாரதி கண்ணீருடன் வந்து உட்காருகிறாள். அடுத்து நலங்கு வைக்கும் நிகழ்ச்சி தொடங்க ஒவ்வொருவராக நலங்கு வைக்க தொடங்குகின்றனர். எல்லாரும் நலங்கு வைத்ததும் ஆதி பாரதி நலங்கு வைக்கிறான். தமிழ் பாப்பாவை கூப்பிட மீண்டும் அவள் பயந்து போய் துரை அருகே சென்று நின்று விடுகிறாள். 

இதனையடுத்து எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர், பாரதியும் சாப்பாடு பரிமாற ஆதி அருகே வந்ததும் அவளால் பரிமாற முடியாமல் கண்ணீருடன் ரூமுக்குள் சென்று விடுகிறாள். இதனையடுத்து மீண்டும் ஆதி வாசுவாக மாறுகிறான். வாசுவை போலவே நடந்து கொள்ள யாருக்கும் எதுவும் புரியாமல் இருக்கிறது. 

மேலும் படிக்க | தனுஷ் 51 படப்பிடிப்பால் போக்குவரத்து பாதிப்பு..பரபரப்பை ஏற்படுத்திய படக்குழு!

சாப்பிட்டு முடித்து கை கழுவ மரகதம் இந்தாங்க தம்பி என்று கை துடைக்க டவலை கொடுக்க ஏய் தாய் கிழவி. ஒரு குடிகாரனுக்கு கட்டி கொடுத்து ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க பாக்கறியா என்று கேட்க மரகதம் வாசு பேசுவது போலவே இருக்க அதிர்ந்து போய் நிற்கிறாள்.

இதற்கு முன்னதாக, வாசுவுக்கு ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் கார் ஸ்கிட்டாகி ஆஃப் ஆனதும், அங்கிருந்தவர் சொன்ன விஷயம் ஆதியின் இதயத்திற்குள் ஏதோ ஒரு மாற்றத்தை  உருவாக்குகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு விசயங்கள் நடந்தேறின. இந்த விஷயம், இதயம் சீரியலில் பல டிவிட்களை கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | D 50 Title: மொட்டை தலை லுக்கில் தனுஷ்! டி 50 டைட்டில் என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News