இளையராஜாவின் அஜித் படத்துக்கு சர்வதேச விருது!- ரசிகர்கள் வாழ்த்து மழை!

இளையராஜாவின் கைவசம் தற்போது சுமார் 20 படங்கள் உள்ளன.

Last Updated : Apr 2, 2022, 10:38 AM IST
  • இளையராஜாவுக்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது
  • சிறந்த ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்குகளுக்காக விருது
  • A Beautiful Breakup இளையராஜாவின் 1422ஆவது படம்
இளையராஜாவின் அஜித் படத்துக்கு சர்வதேச விருது!- ரசிகர்கள் வாழ்த்து மழை! title=

திரையுலகில் 1400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, திரைக்கு வந்த காலம் முதல் தற்போது வரைக்கும் பிஸி இசையமைப்பாளராகவே உள்ளார். திரைப்படங்கள் மட்டுமல்லாது தனி ஆல்பங்கள், இசைக்கச்சேரிகள் உள்ளிட்டவற்றிலும் கவனம் செலுத்திவருகிறார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ள அவரின் கைவசம் மட்டும் தற்போது சுமார் 20 படங்கள் வரை உள்ளன. இவற்றில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிப்படங்களும் அடக்கம்.

திரையுலகில் கணக்கிலடங்கா விருதுகளைக் குவித்துள்ள இளையராஜாவுக்குத்  தற்போது மேலும் ஒரு விருது கிடைத்துள்ளது. இயக்குநர் அஜித்வாசன் உஜ்ஜினா இயக்கத்தில் 5 நேச்சர்ஸ் மூவிஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரித்துள்ள படம் 'A Beautiful Breakup'. ரொமான்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் கிரிஷ் மற்றும் மடில்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தோ- ஆங்கிலப் படமான இப்படத்துக்குத்தான் தற்போது விருது பெற்றுள்ளார் இளையராஜா. 

மேலும் படிக்க| Happy birthday Ilaiyaraaja: பேரக்குழந்தைகளுடன் பியானோ வாசிக்கும் இசைஞானி -வீடியோ

ஆம்ஸ்டெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் (Amsterdam International Film Festival (AIFF) ) இப்படத்துக்கான சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இப்படத்துக்காக அவர் 30 ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்குகளை வழங்கியிருந்த நிலையில் இப்படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இளையராஜாவுக்கு இது 1422ஆவது படமாகும். விருது வென்றுள்ள இளையராஜாவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

மேலும் படிக்க| ராஜமெளலியை நிஜமாகவே Unfollow செய்தாரா ஆலியா பட்?!- உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News