தனுஷ் என்னை காதலித்தார் - நடிகையின் ஓபன் டாக்

வடசென்னை திரைப்படத்தில் எனது நடிப்பை பார்த்து தனுஷ் காதலித்தார் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

Last Updated : Apr 7, 2022, 12:21 PM IST
  • வெற்றிமாறன்தான் என்னை நடிக்க வைத்தார்
  • எனது நடிப்பை பார்த்து தனுஷ் காதலித்தார்
  • ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக்
தனுஷ் என்னை காதலித்தார் - நடிகையின் ஓபன் டாக் title=

தமிழ் சினிமா சமீப காலமாக ஆரோக்கியமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. குறிப்பாக, கதாநாயகர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க எடுக்கப்பட்டுவந்த காலக்கட்டம் மாறி தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம்  கொடுக்கும் படங்களும் வந்துகொண்டிருக்கின்றன.

நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி கதாநாயகிகள் அப்படிப்பட்ட கதைகளில் நடிக்க ஆரம்பித்திருந்தாலும் அவர்கள் தாமதமாகவே அந்த முடிவை எடுத்தனர். ஆனால் சினிமாவுக்கு வந்து சில காலத்திலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் அந்தப் பாதையை தைரியமாக தேர்ந்தெடுத்தார்.

Dhanush, Ishwarya Rajesh

மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடித்த காக்கா முட்டை திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் க/பெ ரணசிங்கம், பூமிகா போன்ற படங்களிலும் நடித்து தனது திறமையை நிரூபித்தார்.

மேலும் படிக்க | அதிக தியேட்டரில் ரிலீசாகும் முதல் படம்: ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கும் பீஸ்ட்!

இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பை பார்த்த ரசிகர்கள், எவ்வித தயக்கமின்றி மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார் என பாராட்டு சான்றிதழ் கொடுத்தனர்.

இந்நிலையில், வடசென்னையில் நடித்தது குறித்தும், வெற்றிமாறன் மற்றும் தனுஷ் குறித்தும் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், “வெற்றிமாறனின் வழிகாட்டுதலினால்தான் வடசென்னை படத்தில் என்னால் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. வடசென்னை படத்தில் காதல் காட்சிகளில் என்னை வெற்றிமாறன் மிகவும் தத்ரூபமாக நடிக்கவைத்தார்.

Dhanush, Ishwarya Rajesh

என் நடிப்பை பார்த்து தனுஷிற்கு காதல் வந்துவிட்டது. தனுஷ் போன்ற ஒரு சிறந்த நடிகர் என் நடிப்பை பார்த்து அசந்துபோனது மிகப்பெரிய விஷயம். வடசென்னையில் எனக்கு கிடைத்த பெயர் நினைத்து பார்க்காதது” என்றார்.

மேலும் படிக்க | நாக சைதன்யாவுடன் மீண்டும் இணையும் சமந்தா?

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது, “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் ரீமேக்கில் நடித்துவருகிறார் என்பதும், அந்தப் படமும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News