நாளை வெளியாகிறது ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங்

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங் நாளை வெளியாக இருக்கிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 1, 2022, 10:18 PM IST
  • ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங் வெளியீடு
  • நாளை வெளியாகிறது பீஸ்ட் வீடியோ சாங்
  • சன் பிக்சர்ஸ் அறிவிப்பு
நாளை வெளியாகிறது ஜாலியோ ஜிம்கானா வீடியோ சாங் title=

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும், விஜய்யை நெல்சன் வீணடித்துவிட்டார். விஜய் என்ற ஒருவரை நம்பி கதை, திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் எனவும் ரசிகர்கள் கூறினர்.

மேலும் படிக்க | ‘மாயவா மாயவா’... வெளியானது இரவின் நிழல் சிங்கிள் பாடல்

அதுமட்டுமின்றி பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டால் அப்செட்டான சன் பிக்சர்ஸ், ரஜினி படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து நெல்சனை நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அது வெறும் புரளி என்று பின்னர் தெரியவந்தது.

Vijay

இந்நிலையில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற “ஜாலியோ ஜிம்கானா” பாடலின் வீடியோ நாளை வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படமான இன்னும் சில மாதங்களில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News