சென்னை: நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கிற்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக அளித்த புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் (Meera Mitun), அவரின் நண்பர் அபிசேக் ஆகியோர் கடந்த ஆக்ஸ்ட்14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீராமிதுனும் அவரின் நண்பருக்கு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் தரப்பில், 35 நாட்களுக்கு மேலாக சிறை, இருப்பதாலும், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டது சோர்வு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவர்களின் கோரிக்கையை ஏற்று நடிகை மீராமிதுன், அவரின் நண்பர் அபிஷேக் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
ALSO READ | என் மூஞ்சிய பாக்கவே புடிக்கல, நான் தற்கொலை பண்ணிக்க போறேன்: மீரா மிதுன்
முன்னதாக பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
அந்தவழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த மாதம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடிகை மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் சம்மனை ஏற்று ஆஜராகாமல், அதற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவானார்.
அவரைத் தேடி வந்த போலீசார், கேரளாவில் வைத்து நடிகை மீரா மிதுனை (Meera Mithun arrested) சைபர் கிரைம் போலீசார் கடந்த மாதம் 14 ஆம் தேதி கைது செய்தனர். தற்போது அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ALSO READ | அரசியல் செய்தியுடன் நிர்வாண படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR