நடிப்பை தவிர கமல்ஹாசனிடம் இருக்கும் ‘பிற’ திறமைகள்-என்னென்ன தெரியுமா..?

HBD Kamal Haasan: உலகநாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்தநாள்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 7, 2023, 10:58 AM IST
  • கமல்ஹாசனுக்கு இன்று 69வது பிறந்தநாள்.
  • நடிப்பை தவிர கமலுக்குள் பல திறமைகள் இருக்கின்றன.
  • அவை என்னென்ன தெரியுமா?
நடிப்பை தவிர கமல்ஹாசனிடம் இருக்கும் ‘பிற’ திறமைகள்-என்னென்ன தெரியுமா..?  title=

ஆறு வயதில் சிறு குழந்தையாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து, தற்போது தனது அறுபதுகளை கடந்தும் அதே உழைப்பு, அதே துடிப்புடன் ‘உலக நாயகனாக’ வலம் வருபவர், கமல்ஹாசன். நடிகராக மட்டுமன்றி, இயக்குநராக, பாடகராக இன்னும் பன்முக திறமை (Kamal Haasan Talents) கொண்டவராக வலம் வரும் வெகு சில திரைப்பட கலைஞர்களுள் ஒருவர், கமல். கமலின் பிறந்த நாளையொட்டி (Kamal Haasan Birthday) அவருக்கு திரைத்துறையினர் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

உலக நாயகன் என அழைக்கப்படுவது ஏன்..? 

“பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழியை பெரியவர்கள் கூற அடிக்கடி கேட்டிருப்போம். அப்படி, தமிழ் சினிமாவில் கதைகளும் காட்சிளும் ஒளிப்பதிவும் மெருகேருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், கமல்ஹாசன். உள்ளூர் தரத்தில் இருந்த சினிமா தொழில்நுட்பங்களை உலக தரத்திற்கு மாற்றிய பெருமையும் இவருக்கும் உண்டு. ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் இடத்தை யாரும் பிடிக்க முடியாது என்று எப்படி சினிமா ரசிகர்கள் கூறுகின்றனரோ, அதே போல உலக நாயகனின் நடிப்பையும் எப்பேர்பட்ட நடிகர் வந்தாலும் ஈடுசெய்ய முடியாது என்று கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பின் அரசனாகவும், சமயங்களில் நடிப்பின் அரக்கனாகவும் திகழ்பவர் கமல். இவரது ரசிகர்கள் பலர், “அமெரிக்காவில் பிறந்து ஹாலிவுட்டில் வளர்ந்து எங்கேயோ போய் இருக்க வேண்டிய ஆளு..” என்று இவரது திறமைகளை கண்டு மெய் சிலிர்த்து பேசுதுண்டு. நடிப்பை தவிர கமலிடம் பல திறமைகள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்க்கலாமா? 

கமல் பிறந்தநாள்

திரைக்கதை-இயக்கம்:

படத்திற்கான திரைக்கதையை எழுதுவதும் எழுதியவாறே அதை இயக்குவதும் கமல்ஹாசனின் பன்முக திறமைகளுள் ஒன்று. அவ்வை சண்முகி படத்தின் இந்தி ரீ-மேக்கை முதன் முதலாக இயக்கிய இவர், அடுத்து கொடுத்த பெரிய படைப்பு ‘ஹே ராம்’. இந்த படம், கமலுக்கு இந்திய அளவில் பெரும் புகழை தேடி தந்தது. இதையடுத்து அவர் இயக்கிய ‘விருமாண்டி’ படமும் சூப்பர் டூப்பர் ஹிட். கமலின் இயக்கம் எந்த அளவிற்கு பிரபலமோ, அதே அளவிற்கு அவரது படத்தின் கதைகளும் சர்ச்சைக்குரியவையாக இருந்தன. அந்த லிஸ்டில் மருதநாயகம், விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களும் இடம் பெறும். 

கமல்

மேலும் படிக்க | சினிமா.. கட்சி.. பிக்பாஸ்.. கோடிகளுக்கு மேல் சொத்து மதிப்பு.. கலக்கும் கமல்

தொழில் நுட்பத்தை சரியாக உபயோகித்தவர்..

கமல் படம் என்றாலே அதில் புதுமை இல்லாமல் இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களோ இல்லையாே, தன் படங்களில் கண்டிப்பாக ஆச்சரியத்தக்க வகையில் பல அம்சங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர் கமல்ஹாசன். அந்த வகையில், தமிழ் சினிமாவில் புதுப்புது தொழில் நுட்பங்களை உள் நுழைத்தற்கான பெருமையும் அவரையே சாரும். 1986ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அந்த படத்திற்கான பாடல்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டன. தமிழ் சினிமாவில் முதன்முறையாக கம்ப்யூட்டரில் பாடல்கள் பதிவு செய்யப்பட்டது இந்த படத்தில்தான். அதே போல, தேவர் மகன் படத்தில் திரைக்கதை எழுத ஒரு சாஃப்ட் வேர் பயன்படுத்தப்பட்டது. மகாநதி படத்தில் ஒளிப்பதிவிற்கான புதிய சாஃப்ட்வேர், இந்தியன் படத்தில் ப்ராஸ்தெடிக் பயன்பாடு, விருமாண்டி படத்தில லைவ் டப்பிங், விஸ்வரூபம் படத்தை நேரடியாக சாட்டிலைட் சானலில் வெளியிட்டது என புதிதினும் புதிய விஷயங்களை அறிமுகம் செய்து வைத்தவர் கமல். 

நல்ல பாடகர்:

தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடிப்பவர்கள் பாடகர்களாகவும் வலம் வருவது இப்போது சகஜமான விஷயமாகி விட்டது. ஆனால், அப்போதே தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் பாடி சிறந்த குரல் வலம் உடையவர் என்ற பெயரை கொண்டவர் கமல்ஹாசன். அழும் குழந்தைகளை சமாதானம் செய்ய, அப்போதைய தாய்மார்கள் அடிக்கடி பாடிய பாடல் “தென்பாண்டி சீமையில..” இந்த பாடல் மட்டுமா? கண்மணி அன்போடு காதலன், அன்பே சிவம், இஞ்சி இடுப்பழகி, ஆழ்வார் பேட்ட ஆண்டவா, சமீபத்தில் விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடல் என காதலாக இருந்தாலும் லோக்கல் மொழியாக இருந்தாலும் அனைத்திலும் பாடி அசத்தியவர் கமல். இவர் குரலில் வெளியான பாடல்களுக்கென பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. 

கமல் படங்கள்

தயாரிப்பாளர்..

நடிகராக, இயக்குநராக, பாடகராக என அவதாரம் எடுத்த கமல்ஹாசன், 1981ஆம் ஆண்டு தயாரிப்பாளராக மாறினார். ஆரம்பத்தில் தனது படங்களை மட்டும் தயாரித்து வெளியிட்டு வந்த அவர், இப்பாேது புதிய கலைஞர்களின் படங்களையும் தயாரித்து வருகிறார். இவரது ‘ராஜ் கமல் இண்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தற்போது சிம்புவின் ஒரு படத்தையும் சிவகார்த்திகேயனின் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறது. 

மேலும் படிக்க | Thug Life என்றால் என்ன? கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுக்கு இப்படி ஒரு அர்த்தமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News