செங்கோட்டையனுக்கு எலும்பில்லாத சாப்பாடு பிடிக்கலாம். எனக்குப் பிடிக்காது என கமல் டுவட்டரில் கூறியுள்ளார்.
தமிழக அரசியல் குறித்து கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பரபரப்பாக கருத்து தெரிவித்து வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரம் முதல் தமிழக அரசுக்கு எதிராக தைரியமாக கருத்துக்களை முன் வைத்து வருகிறார் கமல்ஹாசன். அதிமுகவின் சசிகலா அணி ஆட்சியை வெளிப்படையாகவே எதிர்த்து வருகிறார்.
இந்நிலையில் கமல்ஹாசனை குறித்த செங்கோட்டையன் கூறியதாவது:-
விஸ்வரூபம் பிரச்சினை வந்தபோது இந்திய நாட்டின் மக்களை பற்றி பேசினார். நான் இருப்பதா வேண்டாமா என்று சொன்னாரே. இந்தியாவை விட்டே போகிறேன் என்றாரே. தமிழ்நாட்டை பற்றி பேச அவருக்கு என்ன தகுதியுள்ளது. கமல் போன்றோர் இப்படி சொற்களை வெளிப்படுத்தியது எங்களுக்கு வேதனை தருகிறது எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில் செங்கோட்டையன் கருத்துக்கு ட்விட்டரில் பதில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:-
"செங்கோட்டையனுக்கு பதிலுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க விரும்பவில்லை. சூடான அரசியல் வாதங்களில் என்னை விட அவர் பல மடங்கு அனுபவம் மிக்கவர். அவருக்கு எலும்பில்லாத சாப்பாடு பிடிக்கலாம். எனக்குப் பிடிக்காது," என்று குறிப்பிட்டுள்ளார்.
Wont retort with rudeness.His experience exceeds mine in acidic political exchanges. He might like his meal boneless.I don't.Bon apitit sir
— Kamal Haasan (@ikamalhaasan) February 20, 2017