ரஜினியின் ‘கபாலி’ படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர், நாசர், கலையரசன், ரித்விகா, தினேஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.சந்தோஷ் நாராயண் இசையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘நெருப்புடா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற பாடல்களும் சிறப்பாக இருப்பதாக பாராட்டுக்கள் குவிந்துள்ளன.
‘கபாலி’ படத்தின் ‘டீசர்’ உலக சாதனை படைத்தது. கோடிக்கணக்கானோர் இதை ரசித்தனர். இதுவரை எந்த தமிழ் படமும் இந்த சாதனையை செய்தது இல்லை. இதுவரை எந்த இந்தியப் படமும் வெளியாகாத அளவுக்கு 5000 அரங்குகளுக்கும் மேலாக இந்தப் படத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு திருவிழாவுக்கும் மேலாக கபாலி வெளியீட்டைக் கொண்டாட ஆரம்பித்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். இணையத்தில் எங்கும் கபாலிமயமாகவே உள்ளது. ரிலீசுக்கு 10 நாட்கள் உள்ள நிலையில், முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகளைக் கைப்பற்ற ரசிகர்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளனர்.
பிரான்சில் உள்ள பிரமாண்டமான ரெக்ஸ் திரையரங்கில் நடைபெறுகிறது. 21-ம் தேதி மாலையே இங்கு கபாலி திரையிடப்படுகிறது. ரெக்ஸ் சினிமா அரங்கில் முதல் முறையாக திரையிடப்படும்
தமிழ் படம் ‘கபாலி’என்ற சாதனையும் படைத்திருக்கிறது. தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு, இந்தி, மலையாளம், மலாய், சீன மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் ஆவது மற்றொரு சாதனை. ‘கபாலி’ ரிலீஸ் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.
கபாலியின் மலாய் டப்பிங் ஒரு வாரம் கழித்து ஜூலை 29-ம் தேதி மலேசியாவில் வெளியாகிறது. இதற்காக 400 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மலேசிய சினிமா வரலாற்றில் எந்த ஹாலிவுட் படமும் இவ்வளவு அரங்குகளில் வெளியானதில்லை.
இப்போது, ‘கபாலி’ திரைப்படத்துக்கு சென்சார் ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளனர். இது வருகிற 22-ம் தேதி திரைக்கு வரும் என்று நேற்று இரவு தாணு அறிவித்துள்ளார். இது ரஜினி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.
‘கபாலி’ படத்துக்கு முதல் முறையாக விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. ஏர் ஆசியா நிறுவனம் இதை செய்துள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு ‘கபாலி’ படம் பார்ப்பதற்கான இலவச டிக்கெட் மற்றும் பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி கலெக்டரும் அரசு ஊழியர்கள் மற்றும் நகரை சுத்தமாக வைப்பவர்களுக்கு ‘கபாலி’ இலவச டிக்கெட் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.
இந்தியா தவிர சீனாவில்தான் அதிக எண்ணிக்கையில் ‘கபாலி’ படம் திரையிடப்படுகிறது. சீனாவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படும் முதல் தமிழ் படம் இதுதான். அடுத்து தாய்லாந்தில் அதிக தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்களில் ‘கபாலி’ ரிலீஸ் ஆகிறது. இதுவும் மிகப்பெரிய சாதனையாகும். 22-நம் தேதிக்கு பிறகும் ‘கபாலி’ மேலும் பல சாதனைகளை படைக்கும் என்று ரஜினி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
‘கபாலி’ படத்தை பிரபலப்படுத்துவதற்கு மட்டும் ரூ.40 கோடி செலவிடப்படுகிறது. ஏர் ஆசியா, பைவ் ஸ்டார் சாக்லேட், ஏர்டெல் ஆகியவை கபாலி படத்துக்கு செய்த புதிய புரொமோஷன்கள். தற்போது இன்னொரு வித்தியாசமான புரமோஷனும் இணைந்துள்ளது.
கபாலி என்ற பெயரில் தற்போது மாரத்தான் போட்டி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 31-ம் தேதி மலேசியாவில் உள்ள "ஸ்பாங்க சர்வதேச சர்க்யூட்" என்ற இடத்தில் இந்நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.