பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான ரஜினியின் காலா திரைப்படத்திற்கு தடை விதித்தது கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை!!
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம் 7 ஆம் தேதி உலக முழுவதும் திரைக்கு வருகிறது.
மும்பையின் தாரவி பகுதியில் இருக்கும் தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் தாதாவாக ரஜினி நடித்து உள்ளார். ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், சமுத்திரகனி, நானே பட்டேகர், ஹியூமா குரேஷி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன் அமைத்துள்ளார்.
முதல் பார்வை டிரெய்லர் மற்றும் காலா படத்தின் பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து, நேற்று "காலா" படத்தின் புதிய டிரெய்லரை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டு இருந்தார்.இதையடுத்து, நேற்று காலா டீசர் வெளியானதில் இருந்து 12 மணி நேரத்திற்குள், 26 லட்சத்துக்கும் அதிகமானோர் யூ டியூப்பில் பார்த்துள்ளனர். டீசரில் அரசியல் வாசனங்கள் தப்பவில்லை. ‘‘இந்த உடம்பு தான் நமக்கு இருக்கிற ஒரே ஆயுதம், இத உலகத்துக்கே தெரியப்படுத்துவோம், கூட்டுங்கடா மக்களை, நிலம் உனக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை. நிலமும், தண்ணீரும் எங்களது உரிமை நாங்கள் போராடுவோம்’’ என்று ரஜினியின் வசனம் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் காலா படத்திற்கு கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை செய்துள்ளது. இது பற்றி கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா ரா கோவிந்த் கூறுகையில், கர்நாடக மாநிலத்தின் நலன் கருதி காலா படத்துக்கு தடைவிதித்துள்ளது.