கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கு கிடைத்த அடுத்த குளு.. தீபாவால் பதறிய ரம்யா..

Karthigai Deepam Tamil Serial Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2024, 02:40 PM IST
கார்த்திகை தீபம் அப்டேட்: கார்த்திக்கு கிடைத்த அடுத்த குளு.. தீபாவால் பதறிய ரம்யா..  title=

Zee Tamil TV Serial Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் தீபாவை தேடி வரும் நிலையில் மறுபக்கம் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் தயார் நிலையில் இருக்க இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது ரம்யா நினைத்தபடியே தீபாவை அந்த டாப்புக்குள் உட்கார வைத்து ஆணியை அடித்து தள்ளிவிட தீபா உருண்டு செல்கிறாள், உடனே தீபா ரம்யாவை தட்டி என்ன கனவா என்று கேட்க ரம்யா கனவு என்பதை சுதாரித்து கொண்டு சமாளிக்கிறாள். 

இதையடுத்து மறுபக்கம் கார்த்திக் மற்றும் இளையராஜா என இருவரும் முனீஸ்வரன் கோவில் பூசாரி வீட்டிற்கு வந்து தீபா சொன்ன சாமியார் குறித்து விசாரிக்கின்றனர், சாமியாரா அப்படி யாரும் இல்லையே என்று சொல்லும் பூசாரி பரிகாரத்தை கேட்ட பிறகு ஆமாம் ஒருத்தன் சாமியார் வேடத்தில் இந்த பக்கம் சுத்திகிட்டு இருந்தான். 

மேலும் படிக்க - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்: குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்ட சண்முகம்..

அவன் காவி துணி எல்லாம் கூட போடல, வெள்ளை கலர் ட்ரெஸ் போட்டு தான் சுத்திகிட்டு இருந்தான் என்று சொல்லி முனீஸ்வரன் பிரசாதத்தை கொடுத்து அனுப்ப கார்த்திக், இளையராஜா தீபாவை தேடி அலைகின்றனர். 

மறுபக்கம் பரிகாரத்திற்கான ஏற்பாடுகளை செய்த போலி சாமியார் சீக்கிரம் வாங்க, இருட்டுவதற்குள் பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - பொது இடத்தில் கன்னத்தில் அறை வாங்கிய நடிகர் - நடிகைகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News