ரஜினிக்காக 2 மிகப்பெரிய படங்களை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பதற்காக 2 மிகப்பெரிய படங்களை கீர்த்தி சுரேஷ் நிராகரித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2022, 02:34 PM IST
  • ரஜினிக்காக 2 திரைப்படங்களை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்
  • பொன்னியின் செல்வன் படம் விரைவில் ரிலீஸாகிறது
ரஜினிக்காக 2 மிகப்பெரிய படங்களை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்..! title=

தென்னிந்திய நடிகைகளில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என ஏதாவதொரு மொழியில் அவருடைய படம் ரிலீஸாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வளவு பட வாய்ப்புகள் தேடி வருவதால், எந்த படத்தை தேர்ந்தெடுப்பது, எந்த படத்தில் நடிப்பது என்பது குறித்து கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கும் அவர் தள்ளப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | KGF2 படத்தின் டிரெய்லர் தேதி அறிவிப்பு..! பீஸ்ட் டிரெய்லர்?

இத்தகைய சூழலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்கொண்ட அவர், எந்த படத்தை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து கீர்த்தி சுரேஷூக்கு மிகப்பெரிய குழப்பமே ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மூன்று படங்களும் மிகப்பெரிய பட்ஜெட்டைக் கொண்ட, ஸ்டார் படங்கள். இதில் தேதி பிரச்சனை காரணமாக கடைசியாக இரு படங்களை நிராகரித்துள்ளார். அவர் இரண்டு படங்களை நிராகரிப்பதற்கு ஒரே காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவரைத் தேடிச் சென்றுள்ளது. அந்த நேரத்தில் புகழ்பெற்ற நாவலான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து மிகப்பெரும் பொருட்செலவில் உருவாக்கும் அந்தப் படத்தில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷிடம் கேட்கப்பட்டுள்ளது. இதேபோல், ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடிக்கவும் படக்குழு அணுகியுள்ளது. இப்படியான இக்கட்டான சூழலில் சிக்கிய கீர்த்தி சுரேஷ், எந்த பட வாய்ப்பை தவிர்ப்பது என்பது தெரியாமல் இருந்துள்ளார். கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்காது என்பதால் ‘ அண்ணாத்த’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, மற்ற இரு படங்களான பொன்னியின் செல்வன் மற்றும் ஷியாம் சிங்கா ராய் படங்களை தவிர்த்துள்ளார். சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக இப்படியான முடிவை கீர்த்தி சுரேஷ் எடுத்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.  

மேலும் படிக்க | நான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? பிரபாஸ் விளக்கம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News