சினிமா கனவுகளுடன் சென்னை வந்த கே.எஸ்.ரவிகுமார் ஒருகட்டத்தில் விரக்தியடைந்து, சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்த தருணத்தில் அவரது முடிவை மாற்றியது இயக்குநர் விக்ரமன் தான். அந்த நட்பின் அடிப்படையில் இயக்குநர் விக்ரமனின் புதுவசந்தம் படத்தில் கே.எஸ்.ரவிகுமார் இணை இயக்குநராகப் பணிபுரிந்தார். அந்தத் தொடர்பே தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் பழக்கம் கிடைக்கக் காரணமானது. இதனால் புதுவசந்தம் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி புரியாத புதிர் படத்தைத் தயாரித்தார். அதன் மூலம் கே.எஸ்.ரவிகுமார் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்நிலையில் நட்புக்கு மரியாதை செய்யும் விதமாக விக்ரமன் மகன் கனிஷ்கா நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார்.
இதுகுறித்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:
''இயக்குநராக, நடிகராக இருந்த என்னை கமல்ஹாசன்தான் 'தெனாலி' படத்தின் மூலம் தயாரிப்பாளராக்கினார். இதற்கு ரஜினிகாந்த் பெரிதும் உதவி புரிந்தார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கூகுள் குட்டப்பா’ படத்தைத் தயாரித்திருக்கிறேன். என்னிடம் உதவியாளராகப் பணியாற்றும் சரவணன் மற்றும் சபரி கிரிசன் ஆகியோருக்காக மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி, ‘கூகுள் குட்டப்பா’வை உருவாக்கி இருக்கிறோம். என்னுடைய உதவியாளர்களாக இருந்தாலும், படப்பிடிப்பின்போது என்னைத் தயாரிப்பாளராகப் பார்க்காமல் நடிகராக வேலை வாங்கியது வியப்பை அளித்தது.
படத்திற்காக தர்ஷன் மற்றும் லாஸ்லியா என புதுமுகங்களை இயக்குநர்கள் தேர்வு செய்ததும் படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறது. சரியான திட்டமிடலுடன் படப்பிடிப்பை நிறைவு செய்வதற்காக, என்னுடைய உதவியாளர்களாக இருந்து இயக்குநர்களாக அறிமுகமாகும் சபரி கிரிசன் மற்றும் சரவணனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்கள் இயக்கிய ‘கூகுள் குட்டப்பா’ வெளியாகும் முன்னரே இயக்குநர் விஜய் சந்தர் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்கி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. படத்தின் நாயகி இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பணியாற்றும் பெண்ணாக ஏன் இருக்கக் கூடாது? என்று கேட்டவுடன், இலங்கையில் பிறந்து தமிழை அழகாகப் பேசும் பிக் பாஸ் லாஸ்லியாவைப் படத்தின் நாயகியாக்கினோம்.
மேலும் படிக்க | ராகவா லாரன்ஸை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?
‘கூகுள் குட்டப்பா‘ படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், விக்ரமனின் வாரிசு கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் படத்தைத் தயாரிக்கிறேன். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகும். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் வெளியீட்டுத் தேதியும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்''.
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ரஜினிகாந்த் படத்தில் வைகைப் புயல் - கலக்கும் நெல்சன் திலீப்குமார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR