இதுக்காக கல்யாணம் பண்ணிக்கணுமா ? - பிரபல நடிகை செம்ம பதிலடி...!

நடிகை லட்சுமி மேனன் (Lakshmi Menon) ஐ யாரையாவது திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு வெளியேறுவது நல்லது என்று கூறிய ஒருவரை டிரோல் செய்ததற்க்கு செம்ம பதிலடி கொடுத்துள்ளார் அவர். 

Updated: Sep 20, 2020, 03:47 PM IST
இதுக்காக கல்யாணம் பண்ணிக்கணுமா ? - பிரபல நடிகை செம்ம பதிலடி...!

நடிகை லட்சுமி மேனன் (Lakshmi Menon) ஐ யாரையாவது திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு வெளியேறுவது நல்லது என்று கூறிய ஒருவரை டிரோல் செய்ததற்க்கு செம்ம பதிலடி கொடுத்துள்ளார் அவர். நடிகை சமீபத்தில் தனது போட்டோ ஷூட்டிலிருந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோ அனைவரால் லைக் செய்யப்பட்டது. 

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் (Lakshmi Menon) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட் பகிர்ந்துள்ளார். அதில் ரசிகர் ஒருவர் அவரிடம், 'நீங்கள் சீக்கிரம் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமைதியான வாழ்வை வாழுங்கள். தயவுசெய்து சினிமாவை விட்டு விலகுங்கள். நீங்கள் ஏஞ்சல்'' என்று குறிப்பி்ட்டுள்ளார்.

 

ALSO READ | நடனமாடும் போது தவறி கீழே விழுந்த கும்கி நடிகை......வைரலாகும் வீடியோ

அதற்கு லட்சுமி மேனன், ''என் நலம் விரும்பியின் வேண்டுகோளை பாருங்கள். என்னை போன்ற ஏஞ்சல் திருமணம் செய்து கொள்ளவேண்டுமாம். பரிதாபமானநிலை'' என்று விமர்சித்துள்ளார்.

 

நடிகர் லட்சுமி மேனன் பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக 'கும்கி' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து 'சுந்தர பாண்டியன்', 'பாண்டிய நாடு', 'கொம்பன்', மேலும் தல அஜித்துக்கு தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்த 'வேதாளம்' என பல வெற்றிப்படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

ALSO READ | Viral Photo: மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகாவா இது.. ஒவ்வொரு போட்டோவும் அழகு..