நடனமாடும் போது தவறி கீழே விழுந்த கும்கி நடிகை......வைரலாகும் வீடியோ

நடிகை லக்ஷ்மி மேனன் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Jul 19, 2020, 01:40 PM IST
நடனமாடும் போது தவறி கீழே விழுந்த கும்கி நடிகை......வைரலாகும் வீடியோ title=

'கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லக்ஷ்மி மேனன். இவர்  'சுந்தர பாண்டியன்', 'பாண்டிய நாடு', 'கொம்பன்' என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளளார். இவர் டி.இமான் இசையில் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் 'குக்குறு' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. லட்சுமி மேனன் கடைசியாக விஜய் சேதுபதியின் றெக்க படத்தில் தான் நடித்திருந்தார். 

அதன் பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார் லட்சுமி மேனன். தன் கல்லூரி படிப்பை தொடர்ந்து வருவதாக கூறியிருந்தார்.

 

ALSO READ | PHOTO: இது நம்ம லட்சுமி மேனன்னா?

ஊரடங்கு நேரத்தில் லக்ஷ்மி பாரம்பரிய நடனத்தை பயின்று வருகிறார், மேலும் அவரது முந்தைய வீடியோக்களில் அவர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் தற்போது நடிகை லக்ஷ்மி மேனன் டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் லக்ஷ்மி மேனன் திடீரென தவறி கீழே விழுகிறார். 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

இதற்கிடையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் லட்சுமி மேனன். முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் தான் லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.

Trending News