பாலியல் புகார்கள் குறித்த கேள்வி..டென்ஷனான நடிகர் ஜீவா!! என்ன பிரச்சனை?

Latest News Actor Jiiva Angry : தேனியில், ஒரு கடைத்திறப்பில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா, செய்தியாளர்களிம் காேபப்பட்டு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 1, 2024, 03:31 PM IST
  • மலையாள திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள்
  • ஜீவாவிடம் கேள்வி கேட்ட நிருபர்
  • கோபப்பட்ட ஜீவா!! என்னாச்சு?
பாலியல் புகார்கள் குறித்த கேள்வி..டென்ஷனான நடிகர் ஜீவா!! என்ன பிரச்சனை? title=

Latest News Actor Jiiva Angry : தமிழில், முக்கிய நடிகராக விளங்குபவர் ஜீவா. இவர், தேனியில் இருக்கும் ஒரு கடைத்திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்கையில் நடிகர் ஜீவா டென்ஷனாக பேசினார். 

படங்களில் பெரிதாக நடிக்காத ஜீவா:

படத்தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன், ஜீவா. 2005-2014 காலத்தில் வெளிவந்த பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்து ஹிட் ஹீரோவாக வலம் வந்தவர் இவர். ஜீவாவின் நடிப்பில் வெளியான, ராம், கற்றது தமிழ், ஈ போன்ற திரைப்படங்கள் இவரை ஒரு ஸ்டாராக மட்டுமன்றி நல்ல நடிகராகவும் உயர்த்தியது. இவர் நடித்த சிவா மனசுல சக்தி, கோ, கவலை வேண்டாம், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட படங்கள் பலருக்கு இப்போது வரை ஃபேவரட் ஆக இருக்கிறது. நன்றாக வளர்ந்து வந்த இவரது மார்கெட், நண்பன் படத்திற்கு பிறகு சர்ரென சரிய தொடங்கியது. இதற்கு காரணம் பலருக்கு தெரியவில்லை.

கடை திறப்பு விழா:

தேனியில் உள்ள ஒரு பிரபல துணிக்கடையின் திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், நடிகர் ஜீவா கலந்து கொண்டு அந்த கடையை திறந்த வைத்தார். இதையடுத்து, அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை சந்தித்து கேள்விகளை கேட்டனர். அப்போது, ஒரு கேள்விக்கு கடுப்பான ஜீவா “நீ என்ன லூசா..?” என்று கேட்டு அவரிடம் எகிறிக்கொண்டு வந்தார்.

என்ன நடந்தது? 

கேரளாவில், மலையாள நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை சந்தித்திருப்பதாக தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து, நீதிபதி ஹேமா தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு இந்த வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவை பாேல, பிற மொழிகளிலும் இது போன்ற அநீதிகள் நடந்து வருவதால், இதை தடுக்க அந்தந்த திரையுலகை சார்ந்த நடிகைகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இது, தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த செய்தியாக இருக்கிறது. இதனால், தமிழ் திரையுலக நடிகர்களை கூட விட்டு வைக்காமல் அனைவரிடமும் பாலியல் புகார்கள் குறித்த கேள்விகளை செய்தியாளர்கள் கேட்டு வருகின்றனர். அந்த வகையில்தான், தேனிக்கு வந்திருந்த நடிகர் ஜீவாவிடமும் ஹேமா கமிஷன் குறித்தும், மலையாள திரையுலகில் எழுந்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. 

மேலும் படிக்க | பிரபல நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு! பதிலளித்த ரியாஸ் கான்..என்ன சொன்னார் தெரியுமா?

வாக்குவாதம்..

மலையாளத்தில் நடிகைகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க ஹேமா கமிட்டி நியமிக்கப்பட்டிருக்கு..” என்று கேள்வியை செய்தியாளர் முடிப்பதற்குள் அவரை இடைமறித்த ஜீவா “ஓ அப்டியா..” என்று நக்கலாக கேட்டார். தொடர்ந்து, “அது உண்மையாகவே ரொம்ப தப்பான விஷயம். Me Tooங்க்ர ஒரு விஷயம் வந்தது...இப்போ அதோட பார்ட் 2 வந்திருக்கு..எல்லாரும் வெளிச்சம் போட்டு எல்லாத்தையும் சொல்றாங்க..சினிமாவில் ஆரோக்கியமான சூழல் இருந்தால் நன்றாக இருக்கும்” என்று கூறினார். 

Jiiva

தொடர்ந்து அது குறித்து கேள்வி கேட்ட போது “தமிழ் சினிமாவில் அது போன்ற பிரச்சனை இல்லை. கேரளாவில்தான் இருக்கிறது” என்று கூறிய ஜீவா “உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிட்டேன்..திரும்ப திரும்ப எல்லாம் சொல்ல முடியாது..” என்று கூறினார். இந்த வாக்குவாதம் முற்றிப்போனதை அடுத்து “நீ என்ன லூசா..” என்று செய்தியாளரை பார்த்து கேட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வரலாக பரவி வருகிறது. 

கற்பழிப்பு குறித்து ஜோக் செய்த ஜீவா!!

நடிகர் ஜீவா, 2012ஆம் ஆண்டு நண்பன் படத்தில் நடித்த போது ஒரு நேர்காணலில் படக்குழுவினருடன் கலந்து கொண்டார். அப்போது ஒரு பார்வையாளர் அவரிடம், “உங்களுக்கு 8 நடிகைகளுடன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது..இன்னொரு பக்கம் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. எதை செலக்ட் செய்வீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜீவா, “வில்லனாகத்தான் நடிப்பேன்..அப்போதுதான் யார வேணாலும் தூக்கிட்டு போய் கற்பழிக்க முடியும்” என்று கூறினார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | சூர்யா நடிக்க இருந்த படம்..ஜீவா நடித்து Flop ஆனது! எந்த படம் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News