வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்!! விஜய்யை விட கம்மியா? எவ்வளவு?

Rajinikanth Salary For Vettaiyan Movie : ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Sep 23, 2024, 12:25 PM IST
  • வேட்டையன் படம் அக்டோபர் 10 ரிலீஸ்
  • இதில் நடிக்க ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு?
  • விஜய்யை விட குறைவா?
வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்!! விஜய்யை விட கம்மியா? எவ்வளவு?  title=

Rajinikanth Salary For Vettaiyan Movie : தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகராக விளங்கி வருபவர், நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் உருவாகும் படங்கள், சுமாராக இருந்தாலும் சரி-சூப்பராக இருந்தாலும் சரி, நல்ல வசூலை பெற்றுவிடும். அந்த வகையில், இவர் நடிப்பில் வரும் மாதம் வெளியாக இருக்கும் படம்தான், வேட்டையன்.

வேட்டையன் திரைப்படம்:

ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ் பெற்ற டி.ஜே.ஞானவேல் ரஜினிகாந்தை வைத்து இயக்கியிருக்கும் படம், வேட்டையன். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரானா டகுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். 

ரஜினிகாந்திற்கு, போலீஸ் அதிகாரி வேடங்களில் நடிப்பது கைவந்த கலை. அந்த வகையில், வேட்டையன் படத்திலும் ஒரு நேர்மையான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக, காவல் துறை அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில், ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில், வேட்டையன் படத்தின் பிரிவ்யூ டீசர் காட்சி வெளியிடப்பட்டது. இது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினிகாந்தின் சம்பளம்:

இந்திய அளவில் பெரிய நடிகராக விளங்கும் ரஜினி, அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகராகவும் வலம் வருகிறார். 100களில் ஆரம்பித்த இவரது திரைப்பயணம், இப்போது பல கோடிகளை தாண்டி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், கடைசியாக ஹீரோவாக நடித்த ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக, அவர் சுமார் ரூ.110 கோடி சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. 

தற்போது வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படத்தை, லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரஜினி இதற்கு முந்தையதாக கேமியோ கதாப்பாத்திரத்தில் நடித்த லால் சலாம் படத்தையும் இந்த நிறுவனம்தான் இயக்கியது. இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து, ரஜினிக்கு சுமார் ரூ.125 கோடி சம்பளத்தை லைகா நிறுவனம் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Rajinikanth

மேலும் படிக்க | 50 வினாடி நடிக்க 5 கோடி சம்பளம் வாங்கும் தமிழ் நடிகை! யார் தெரியுமா?

விஜய்யை விட குறைந்த சம்பளம்..

தமிழ் சினிமா என்றாலே, ரஜினிக்கு பிறகுதான் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கிறது. விஜய்க்கு, நாளடைவில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பளத்திலும் ரஜினியை மிஞ்சியிருக்கிறார் விஜய்.

அவர் சமீபத்தில் நடித்த ‘தி கோட்’ படத்திற்காக ரூ.200 கோடியை சம்பளமாக பெற்றதாக, அப்படத்தின் தயாரிப்பாளரே ஒரு நேர்காணலில் கூறினார். அடுத்து நடிக்கும் ‘தளபதி 69’ படத்திற்காக சுமார் ரூ.275 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அனைத்திலும் ரஜினியையும் விஜய்யையும் ஒப்பிட்டு பேசி வரும் ரசிகர்கள், சம்பள விஷயத்திலும் இருவரையும் கம்பேர் செய்து வருகின்றனர். ரஜினி-விஜய்யின் தற்போதையை சம்பளம் குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்…

நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் படத்திற்கு அடுத்ததாக, கூலி படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்த படம், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை வைத்துக்கொண்டு நெல்சன் ரெடியாக இருப்பதாகவும், அந்த படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேட்டையன் படம், வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

மேலும் படிக்க | குக் வித் கோமாளி மணிமேகலை-பிரியங்கா சம்பள விவரம்! இருவரில் யாருக்கு அதிக சம்பளம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News