Actor Vijay Last Wish In Cinema : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். ஆனால், “நடிகர்” விஜயிலிருந்து “தவெக தலைவராக” மாறிய விஜய், இன்னும் சில மாதங்களில் திரையுலகிற்கு குட்-பை சொல்ல இருக்கிறார். ஆனால், திரையுலகிற்கு வரும் போது, இவருக்கு இந்த அரசியல் ஆசையெல்லாம் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், சினிமாவில் முழு நேரமாக மூழ்கி இருந்த போது அவருக்கு இருந்த ஆசையே வேறு. அது குறித்த முழு தகவல்கள், இங்கு பார்ப்போம்.
32 ஆண்டுகளை நிறைவு செய்த விஜய்!
நடிகர் விஜய் முதன்முதலாக நடித்த நாளைய தீர்ப்பு படம் வெளியாகி, 32 வருடங்கள் நிறைவடைந்தது. தந்தையை பார்த்ததாலோ, அல்லது ரஜினி படங்களை அதிகமாக பார்த்தாலோ விஜய்க்கு திரைத்துறை மீது அதீத ஆர்வம் வந்தது. இதனால், தன்னை டாக்டராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பெற்றாேரை சமாதானம் செய்து நடிகராக மாறினார். முதல் படம், அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், தனது விடாமுயற்சியாலும் தந்தையின் உந்துதலாளும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது.
படங்களில் நடிக்க ஆரம்பித்த புதிதில், முகம் சரியில்லை, உடல் ஒல்லியாக இருக்கிறது என்று பலர் விஜய்யை கலாய்த்தனர். அத்தனையையும் தாண்டி, விஜய்யின் படங்கள் ஹிட் அடிக்க ஆரம்பித்தது. சில வருடங்களிலேயே அவருக்கு ரசிகர் கூட்டம் சேர, இப்போது தமிழ் திரையுலகின் டாப் நடிகராக வளர்ந்து நிற்கிறார். விஜய்யின் இத்தனை ஆண்டுகால திரைப்பயணம் குறித்து பலர் இணையத்தில் பேசி வந்தனர். அப்போது, இவரது நிறைவேறாத ஆசை ஒன்று குறித்தும் பலர் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
நடிகர் விஜய்க்கு, கிட்டத்தட்ட 24 ஆண்டு காலமாக நிறைவேறாத ஆசை ஒன்று இருக்கிறதாம். அவருக்கு, 2000ஆம் ஆண்டில் இருந்தே, ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். இதை, பிரபல இயக்குநர் விஜய் மில்டனிடம் தெரிவித்திருக்கிறார் விஜய். நடிப்பதில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து, திரைப்படங்களை எடுக்கலாம் என்ற ஐடியா இருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், அந்த கனவு, இப்போது வரை நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறதாம்.
சினிமா to அரசியல்!
நடிகர் விஜய், திரையுலகில் வெற்றி நடிகராக வலம் வந்ததற்கு காரணம், அவரது யதார்த்தமான நடிப்பு என்றாலும், அவரது ரசிகர்களும் அதற்கு பெரிய காரணமாக அமைந்தனர். சினிமாவில் இன்னும் அனைத்து உயரங்களையும் தொடவில்லை என்றாலும், பிறரால் தொட முடியாத இடங்களை பார்த்த விஜய்க்கு, கடந்த சில ஆண்டுகளாகவே அரசியல் ஆர்வம் இருந்து வந்தது. மெர்சல், பிகில், சர்க்கார், வாரிசு உள்ளிட்ட படங்களின் இசை வெளியீட்டு விழாவிலேயே இது நன்றாக தெரிந்தது.
மேலும் படிக்க | விஜய்யுடன் 24 வருடம் கழித்து நடிக்கும் 48 வயது பிரபல நடிகை!! யார் தெரியுமா?
தனக்கென தனியாக ஒரு டீமை செட் செய்து, அவர்களை களப்பணியில் முதலில் ஈடபட செய்த விஜய், சரியாக நேரம் பார்த்து இந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அப்போது, தான் கமிட் ஆகியிருக்கும் கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு, சினிமாவை விட்டு விலகி முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் குறிப்பிட்டார். சினிமாவில் சிகரம் தொட்ட விஜய்க்கு, அரசியில் ஆட்டம் காட்டுமா, அடி பணியுமா என்பது இனிதான் தெரியும்.
கடைசி படம்!
நடிகர் விஜய்யின் கடைசி படம், ‘தளபதி 69’. இந்த படத்தை, ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள், சென்னையில் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது. இந்த படம் விஜய்யின் கடைசி படமாக இருப்பது, ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | தளபதி 69 ரீ-மேக் படமா? அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்! எந்த படம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ