பிரத்தியேக செய்தி! வலிமையின் "இந்த" ஸ்டண்ட் சீக்வென்ஸில் தல அஜித் காயம்

வலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

Last Updated : Nov 27, 2020, 11:08 AM IST
பிரத்தியேக செய்தி! வலிமையின் "இந்த" ஸ்டண்ட் சீக்வென்ஸில் தல அஜித் காயம்

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

ஊரடங்கு (Lockdown) தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் வலிமை படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் சண்டை காட்சிகளில் கலந்துகொண்டபோது நடிகர் அஜித்துக்கு (Ajith Kumar) சிறிய காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. 

ALSO READ | இவ்வளவு அழகா.....தனது பெற்றோருடன் தல அஜித்தின் புகைப்படம் இணையத்தில் வைரல்...

தல ஒரு பைக்கில் இருக்க வேண்டும் மற்றும் அதிக வேகத்தில் வில்லன்களை நோக்கி வர வேண்டிய ஒரு காட்சியை பதிவு செய்யும் போது, நடிகரின் பைக் கவனக்குறைவாக நழுவி அதில் சில காயங்கள் ஏற்பட்டன என்று கூறப்பட்டது. அதற்காக ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொண்டு அஜித்குமார் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 

Thala Ajith’s latest bike stunt pic from Valimai is going viral, here’s another interesting fact

இந்தநிலையில், வலிமை (Valimai) படத்தில் அஜித் குமார் பைக் ஓட்டும் காட்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் புகைப்படங்களை இணையத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். 

 

 

வலிமை படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகளைக் கடந்து விட்டது, படம் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. அதனால், அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக அப்டேட் குறித்து கேட்டு வருகின்றனர்.

ALSO READ | தல அஜீத்தின் 'வலிமை' படம் குறித்து வெளியான பரபரப்பு தகவல்....

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3lo

More Stories

Trending News