பழம்பெரும் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் காலமானார்

இந்தி சினிமா துறையில் பிரபல கதாநாயகனாக நடித்து பல விருதுகளைப் பெற்றவர் திலீப் குமார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 7, 2021, 08:24 AM IST
பழம்பெரும் நடிகர் திலீப் குமார் உடல்நலக்குறைவால் காலமானார் title=

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் இன்று காலமானார். அவருக்கு வயது 98 ஆகும். 

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் (Dilip Kumar), 1994 ஆம் ஆண்டில் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் (Flimfare Award) விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 

ALSO READ | ஒளிப்பதிவு திருத்த மசோதா விவகாரம்: ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்

1944 ஆம் ஆண்டில் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர் 1998 ஆம் ஆண்டில் நடித்தார். கடந்த ஜூன் 6-ம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 

ஐந்து நாள்கள் சிகிச்சை பெற்ற பின்னா் அவா் வீடு திரும்பினாா். அவருக்கு மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் ஜூன் 29 அன்று அனுமதிக்கப்பட்டாா். அவரின் வயதைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திலீப் குமார் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ | D44-ல் மீண்டும் இணையும் தனுஷ்-அனிருத்: விரைவில் படப்பிடிப்பு துவக்கம், ஆவலில் ரசிகர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Trending News