ஆம்... லியோ படத்தின் ஃப்ளாஷ்பேக் பொய் தான் - உண்மையை சொன்ன லோகேஷ்!

Lokesh kanagaraj Interview: லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியான லியோ படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வருகிறது.  கிட்டத்தட்ட 500 கோடி வசூலித்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 30, 2023, 06:59 AM IST
  • லியோ படம் 500 கோடி வசூல் செய்துள்ளது.
  • வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது..
  • தமிழகத்திலும் நல்ல வசூல் செய்துள்ளது.
ஆம்... லியோ படத்தின் ஃப்ளாஷ்பேக் பொய் தான் - உண்மையை சொன்ன லோகேஷ்! title=

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள லியோ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.  இந்த எதிர்பார்ப்புகளை படம் பூர்த்தி செய்துள்ளது, மேலும் உலகம் முழுவதும் வசூல் மழை கொட்டி வருகிறது.  லியோ படம் LCUன் ஒரு பகுதியாக இருந்தது.  படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தது என்றும், இரண்டாம் பாதி அதே அளவுக்கு இல்லை என்றும் விமர்சனங்கள் இருந்தன.  இந்நிலையில், லியோ படம் குறித்தும் விஜய்யின் கதாபாத்திரம் குறித்தும் லோகேஷ் கனகராஜ் தற்போது பேசியுள்ளார். இந்த தகவல்கள் ரசிகர்களுக்கு மேலும் ஆச்சர்யத்தை தந்துள்ளது.  லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில், 

லியோவின் ஃப்ளாஷ்பேக் உண்மையா?

"லியோவின் உண்மையான கதையை பார்த்திபன் தன் கண்ணோட்டத்தில் சொல்லவே இல்லை. அது ஹிருதயராஜின் (மன்சூர் அலிகான்) சொன்ன கதை.  படத்தில், ஹிருதயராஜ் சொல்லப்போகும் கதை முழுக்க முழுக்க அவரது கண்ணோட்டத்தில் இருந்ததாக ஒரு டயலாக் இருந்தது. எடிட்டர் ஃபிலோவுடன் நடந்த விவாதத்திற்குப் பிறகு, அந்த டயலாக்கை நீக்கிவிட்டேன். உண்மையில் பிளாஷ்பேக் காட்சிகள் 45 நிமிடங்கள் இருந்தன.  ஆனால் அவை படத்தில் வரவில்லை"

மேலும் படிக்க | லியோ படத்தின் வெற்றி விழா - காவல்துறை சொன்ன முக்கிய தகவல்!

கௌதம் மேனனின் கதாபாத்திரம் பற்றி

"கௌதம் மேனனின் கேரக்டருக்கு நிறைய முக்கியத்துவம் கதையில் சேர்த்திருந்தேன். முதல் காட்சியில் அவர் துப்பாக்கியில் சுட தடுமாறுவார், ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் சரியாக அதே துப்பாக்கியில் சுடுவார். இது அவர் ஒரு அலர்ட் போலீஸ் என்பதைக் காட்டுகிறது. மேலும் லியோ கதாபாத்திரம் சம்பந்தமாக அவருக்கு தொடர்பு உள்ளது"

பார்த்திபன் - லியோ கதாபாத்திரம்

"லியோ கதாபாத்திரத்தில் விஜய் கேரக்டருக்கு நிறைய லெவல்கள் இருக்கு. உதாரணமாக விஜய் ஆரம்ப சண்டை காட்சிக்கு பிறகு அவரது கடையில் உட்கார்ந்து அழுவார்.  பிறகு பார்த்திபன் என்று யாரேனும் அழைத்தால் அவர் திரும்ப மாட்டார். இரண்டு அல்லது மூன்று முறை கூப்பிட்டால் மட்டுமே அவர் திரும்புவார். 
இதற்கு காரணம் அவர் பார்த்திபன் இல்லை, லியோவாக மாறுகிறார் என்பதை உணர்த்தும்"

லியோவின் முதுகில் துப்பாக்கிச் சூட்டுத் தழும்பு

“சில கேள்விகளுக்கு படத்தில் பதில் சொல்லாமல் விட்டுவிட்டேன். உதாரணமாக லியோவின் துப்பாக்கிச் சூட்டு தழும்புகள் அவன் உடம்பில் இருக்க வேண்டும். ஏனென்றால் பார்த்திபன் கதாபாத்திரம் 2,3 முறை சட்டை இல்லாமல் இருப்பதை காட்டியிருக்கிறேன். லியோ தனக்கென ஒரு வரலாற்றை போலியாக உருவாக்கிக்கொண்டவர். ஆவணங்கள், சான்றிதழ்கள், புகைப்படங்கள் மற்றும் பல வகையில் உருவாக்கி இருப்பார். அதனால் தனது வடுக்கள் மற்றும் காயங்களை மறைப்பது அவருக்கு பெரிய விஷயம் இல்லை. கௌதம் மேனனுக்கும் படத்தில் இந்த சந்தேகம் உள்ளது"

டைட்டில் மற்றும் ஹைனா இணைப்பில் உள்ள சிங்கம் பற்றி

"நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு கதையை எழுதிய காலத்திலிருந்தே, ஹைனா ஒரு ஹைனாவாக மட்டுமே இருந்தது.  பிறகு, லியோவின் தலைப்பு அழிந்துபோன கேப் சிங்கத்தைக் குறிக்கிறது. லியோ கதாபாத்திரமும் அதைப் பற்றியது தான். செத்துவிட்டதாக கூறப்படும் ஒரு நபர், ஆனால் அவர் உண்மையில் சாகவில்லை, அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்"

போஸ்டர்களில் உள்ள 'Alter ego' பற்றி

"எனக்கு இந்த Alter ego கான்செப்ட் மிகவும் பிடிக்கும். லியோ படத்தில் முதல் சண்டை காட்சி, ஒருவர் யார் என்பதற்கும் அவன் யாராக இருக்க விரும்புகிறான் என்பதற்கும் இடையேயான வித்தியாசத்தை மிகச்சிறப்பாகக் காட்டியது. சாலையில் விபத்தைப் பார்த்தால், நீங்கள் உதவ வேண்டும் என்று விரும்புகிறீர்கள், ஆனால் உங்களில் எத்தனை பேர் உண்மையில் உதவுகிறீர்கள்? இது மூளைக்கும் மனதிற்கும் இடையிலான சண்டை"

LCUல் விஜய் மற்றும் ஃபஹத்

"லியோ தனது அடையாளத்தை மறைக்க நிறைய விஷயங்களை செய்துள்ளார். இந்த செயல்களின் போது, ​​சத்தியமங்கலம் அனாதை இல்லத்தில் விஜய் மற்றும் ஃபஹத் கதாபாத்திரங்களுக்கு இடையே ஒரு தொடர்பு உள்ளது. LCU முழுவதும் அனாதை இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகள், அங்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டது. இனிவரும் LCU படங்களில் இந்த கதையை நிச்சயம் சொல்வேன்"

லியோ படத்தில் LCU பெரிதாக இல்லாதது பற்றி

"லியோவின் பாத்திரம் பற்றி இந்த படத்தில் கவனம் செலுத்த விரும்பினேன். இதனால் LCUவை கட்டாயப்படுத்தி இணைக்க விரும்பவில்லை. இருப்பினும், அடுத்த வரும் #Kaithi2 போன்ற படங்களில், எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றாக இணையும்" என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ரஜினி - லோகேஷ் படம் குறித்து முக்கிய அப்டேட் சொன்ன மனோஜ் பரமஹம்சா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News