லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Gautham Vasudev Menon Salary in Leo: லியோ படத்தில் நடித்த கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சம்பளமாக எவ்வளவு வாங்கினார் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 2, 2023, 02:19 PM IST
  • கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார்.
  • கவுதம் மேனன் சம்பள விவரம்.
  • லியோ திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? title=

லியோ படத்தில் நடிக்க கவுதம் மேனன் வாங்கிய சம்பளம் விவரம்: லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்த கவுதம் மேனன் எவ்வளவு சம்பளமாக வாங்கினார் என்று பார்ப்போம்.

லியோ திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) இயக்கத்தில் கடந்த 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ (Leo Movie). விஜய், த்ரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோ (Leo Movie) படம் கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சிகளை கொண்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் (Lokesh Cinematic Universe) ஒரு பகுதியாகும். லியோ திரைப்படம் விஜய்யின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. வழக்கமான விஜய் படங்களை போன்று அறிமுக பாடல், சண்டைக்காட்சி இல்லாத முற்றிலும் வித்தியாசமான படமாக லியோ இருந்தது.

லியோ படத்தின் வசூல் நிலவரம்:
இதனிடையே பிரமாண்டமாக 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் லியோ, ரிலீஸாகி முதல் நாளே உலகளவில் 148 கோடி ரூபாயிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது. எனவே தற்போது லியோ திரைப்படம் வெளிவந்து 11 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் 510 கோடி ரூபாய் வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் லியோ தான் 500 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தளபதி விஜய்யின் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது. 

மேலும் படிக்க | அர்ஜுனின் மகளுக்கு வருங்கால மாமனார் தம்பி ராமையா போட்ட கண்டீஷன்! என்ன தெரியுமா?

கவுதம் மேனன் சம்பள விவரம்:
இந்நிலையில் லியோ திரைப்படத்தில் நடித்துள்ள கவுதம் மேனன் சம்பள விவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள கவுதம் மேனன் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 70 லட்சம் வாங்கிய சம்பளம் சம்பளமாக கவுதம் மேனன் வாங்கியதாக கூறப்படுகிறது.

கவுதம் வாசுதேவ் மேனன்:
கவுதம் மேனன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராவார். மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார். இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகும். இவர் தற்போது இயக்குனர் பணியுடன் பல படங்களில் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். 

இதயனிடையே இவரது இயகத்தில் நீண்ட காலமாக வெளியீட்டிற்காக காத்திருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த திரைப்படம் இந்த மாதம் (நவம்பர் மாதம்) திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபக்கம் லியோ திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | லியோ-2 படம் தயாராகுமா? லோகேஷ் கனகராஜ் கூறிய பதில் இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News