நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் சைபா் குற்றப்பிரிவினா் மீரா மிதுன் மீது எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த மீரா மிதுனை போலீஸாா் கேரள மாநிலம் ஆலப்புழையில் கடந்த 14-ஆம் தேதி கைது செய்தனா்.
பேய் வேடத்தில் மீரா மிதுன் நடிக்கும் " பேய காணோம் " திரைப்படத்தை இயக்குனர் செல்வ அன்பரசன் இயக்குகிறார். குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் தயாரிக்கும் படத்திற்கு " பேய காணோம் " என்று வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளார். இந்த படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் . மேலும் இயக்குனர் தருண் கோபி, கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், முல்லை, ஜெயா டிவி ஜேக்கப், செல்வகுமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
மிஸ்டர் கோளாறு இசையில், ராஜ்.O.S ஒளிப்பதிவில், கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை செல்வ அன்பரசன் மேற்கொள்கிறார். வாழ்க்கையில் பணத்தை காணோம், குழந்தையை காணோம், பொருளை காணோம்,நண்பனை காணோம், இன்னும் எதை எதையோ காணோம் என்று தேடியிருப்போம். முதன் முதலாக ஒரு பேயை தேடுகிறார்கள். பேயை எதற்காக தேடுகிறார்கள் என்பது தான் படத்தின் திரைக்கதை.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் இது. 90 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் நாயகி மீரா மிதுன் ஜாமினுகாக காத்திருக்கிறார்கள். ஜாமின் கிடைத்தவுடன் படத்தின் இதர 10 சதவீதம் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR