ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் போன்ற வீரர்கள் இந்திய அணிக்காக நீண்ட நாட்களாக விளையாடி வருகின்றனர். சமீபத்திய போட்டிகளில் இவர்கள் சரியாக விளையாடாததால் ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிசிசிஐ அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சுழற்சியின் தொடக்கத்திற்கு முன் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிரான வரலாற்று தோல்வி பிசிசிஐயை இப்படி சிந்திக்க வைத்துள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரின் முடிவு சில மூத்த வீரர்களின் கடைசி தொடராகவும் இருக்கலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ வைத்த செக்! இனி ஒன்றும் செய்ய முடியாது!
நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். "இந்த தோல்வியை பற்றி சிந்திக்க வேண்டும். ஆனால் அடுத்து பெரிய சவால் உள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் கவனம் செலுத்துவது முக்கியம். அந்த தொடருக்கு பிறகு என்ன நடக்கும் என்று தெரியாது. தற்சமயம் அது மட்டும் தான் என் மனதில் உள்ளது. பிறகு என்ன நடக்கும் என்பதை பற்றி யோசிப்பதை விட BGTல் கவனம் செலுத்த முயற்சிப்போம்," என்று ரோஹித் சர்மா கூறினார். பிசிசிஐ முக்கிய தலைவர்கள் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் இடையே வருங்கால அணி குறித்த பேச்சுவார்த்தை இப்போது இருந்தே தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
"நிச்சயமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்குப புறப்பட்டு செல்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான இந்த தோல்வி மிகப்பெரிய அவமானம். ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்கான அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. ஆனால் இங்கிலாந்தில் நடைபெறும் WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லை என்றால் அணியில் உள்ள நான்கு சூப்பர் சீனியர்களும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஒருவேளை அந்த நான்கு பேருக்கும் மும்பை டெஸ்ட் தான் கடைசி சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட்டாக இருக்கலாம்" என்று பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
WTC இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவை 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். அப்படி வென்றால் வேறு எந்த அணியையும் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்திரேலியா தொடர் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றால் இந்திய அணி தகுதி பெறுவது மிகவும் கடினம். அடுத்தடுத்த தொடர்களில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்க பிசிசிஐ தயார் ஆகி வருகிறது. நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன், அஷ்வினின் எதிர்காலம் விவாதிக்கப்படலாம். ரோஹித் சர்மாவிற்கு பிறகு ஜஸ்பிரித் பும்ரா, ஷுப்மான் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரில் ஒருவருக்கு டெஸ்ட் தலைமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரோஹித், கோலி, அஷ்வினுக்கு இது தான் கடைசி டெஸ்ட் போட்டி: பிசிசிஐ அதிரடி முடிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ