)
Sukran Peyarchi Palangal: செல்வம், பெருமை, மகிழ்ச்சி, அன்பு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக இருப்பவர் சுக்கிரன். வாழ்க்கையில் செல்வம், பெருமை மற்றும் அனைத்து வகையான வசதிகளையும் தரும் சுக்கிரன், வரும் நவம்பர் 7ம் தேதியன்று அதிகாலை 03:21 மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மிதுனம், தனுசு உள்ளிட்ட 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும்.
மேஷ ராசி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் (Aries Venus Transit Effect)
மேஷ ராசியினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தின் தாக்கம் சுபமாக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் கிட்டும். வேலையில் வெற்றியும், நல்ல பலனும் கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து புதிய ஆர்டர்கள் கிடைக்கும். இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். நிதி ரீதியாக, இந்த காலகட்டத்தில் பலனடைவீர்கள். ஆனால், செலவுகளும் அதிகரிக்கலாம். எனவே கவனமாக இருங்கள். காதல் உறவுகளில், உங்கள் துணையிடம் பொறுமையாக இருக்க வேண்டும்.
மிதுனம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் (Gemini Venus Transit Effect)
மேஷ ராசியினருக்கு சுக்கிரன் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். நிதி ரீதியாக, நிலைமை நன்றாக இருக்கும். பண வரவும் இருக்கும். ஆனால், உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அதிகப்படியான செலவுகள் உங்களை சிக்கலில் ஆழ்த்தும். குடும்ப வாழ்க்கையில், உங்கள் மனைவியிடமிருந்து அன்பையும் மரியாதையையும் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உத்தியோகம் காரணமாக பயணம் செய்ய நேரிடலாம். தொழில் சம்பந்தமான நோக்கங்கள் நிறைவேறும்.
கன்னி சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் (Virgo Venus Transit Effect)
கன்னி ராசிக்காரர்களுக்கு இனிவரும் காலம் மகிழ்ச்சியையும், வளத்தையும், முன்னேற்றத்தையும் தரப் போகிறது. கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் தங்கள் செயல்திறனால் எல்லோரையும் கவர்வார்கள். இது அவர்கள் மீதான மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறனை வெளிப்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து வாழ்வில் வசதிகள் பெருகும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தங்களின் திறமை மற்றும் திட்டங்களால் அதிக லாபம் சம்பாதிப்பார்கள்.
துலாம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் (Libra Venus Transit Effect)
துலாம் ராசிக்காரர்கள் பணம், தொழில், உறவுகளில் மாற்றங்களைக் காண்பார்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் பெறலாம். நிதி வரவை பொறுத்தவரை, அதிர்ஷ்டம் உங்கள் பக்கத்தில் இருக்கும். மேலும் பணம் சம்பாதிக்க, உங்கள் உங்கள் முழு திறனை பயன்படுத்தி, முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் மட்டுமின்றி, பிற மூலங்களிலிருந்தும் வருமானம் பெறலாம். அதனால் உங்கள் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். புதிய இடங்களுக்குச் செல்லலாம். வேலை மாற்றம் அல்லது அதிக பயணத்தால் சக ஊழியர்களால் சிறிய அளவில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனினும் பெரிதாக கவலைப்பட ஒன்றுமில்லை.
தனுசு சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் (Sagittarius Venus Transit Effect)
தனுசு ராசியினர், வேலை தொடர்பான திட்டங்களில் மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம், இது உங்களுக்கு பயனளிக்கும். உங்கள் வேலையில் மாற்றங்கள் இருக்கலாம். பணியிடத்தில் பொறுமையாக இருந்து கடினமாக உழைத்தால், நிச்சயம் கை மேல் பலன் உண்டு. சொந்தத் தொழில் உள்ளவர்கள் அதிக லாபம் ஈட்டுவதற்கான திட்டங்களைப் பெறலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வருமானம் அதிகரிப்பதால், வசதிகளும், அடம்பரங்களும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுப்படும். உங்கள் துணையுடன் பொறுமையாகவும் புரிந்துணர்வாகவும் இருங்கள். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வர வாய்ப்பு உள்ளது.
கும்பம் சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் (Aquarius Venus Transit Effect)
சுக்கிரனின் அருளால், கும்பம் ராசியினருக்கு அதிர்ஷ்டம் குறைவில்லாமல். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகளையும் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் புதிய பிசினஸ் ஆர்டர்களைப் பெற்று லாபத்தைப் பெறுவார்கள். இது தவிர, கூட்டாண்மையில் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கூட்டாளரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். உங்கள் துணையுடனான உங்கள் உறவில் நீங்கள் நல்லிணக்கத்தைப் பேணுவீர்கள், அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உறவு மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ