தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்…!

ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்க இருக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Sep 10, 2023, 03:56 PM IST
  • தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.
  • இவர் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • எந்த படத்தை தயாரிக்கிறார் தெரியுமா..?
தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்…!  title=

சந்திரமுகி 2 படத்தில் ஹீரோவாக நடித்துள்ள ராகவா லாரன்ஸ் அடுத்து நயன்தாராவுடன் ஒரு படத்தில் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

நயன்தாரா-ராகவா லாரன்ஸ் இணையும் படம்..! 

நடன இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர், ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில், தான் நடன இயக்குநராக பணிபுரியும் படங்களில் ஹீரோவுடன் நடனமாடிய இவர், இப்போது பிரபலமான ஹீராேக்களுள் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் சினமாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நயன்தாராவுடன் ராகவா லாரன்ஸ் ஒரு படத்தில் இணைய உள்ளதாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு இருவருமே வெவ்வேறு படங்களில் பிசியாகி விட்டதால் இது குறித்த அப்டேட்டுகள் எதுவும் சரிவர வெளியாகாமல் இருந்தன. இந்த நிலையில், மீண்டும் இப்படம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரங்களில் இருந்து கசிந்த வண்ணம் உள்ளன. 

இயக்குநர் யார்..? 

குறைவான பட்ஜெட்டில் வெளியான தமிழ் படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்களுள் ஒன்று, மேயாத மான். இந்த படத்தை இயக்கியவர், ரத்ன குமார். கோலிவுட்டின் தற்போதைய ட்ரெண்டிங் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜின் கதை ஆசிரியர்கள் குழுவில் இவரும் ஒருவர். லோகியின் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இவர் பணிபுரிந்துள்ளார். அமலா பாலை வைத்து ஆடை படத்தை இயக்கிய இவர், அடுத்து ராகவா லாரன்ஸ் மற்றும் நயன்தாராவை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

Ragava

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு..?

‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது நண்பர் ரத்ன குமார் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ஐந்து படங்களை மட்டுமே இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ், பல முன்னணி நடிகர்களை தன் படங்களில் நடிக்க வைத்து சம்பவம் செய்து விட்டார். இவர், ராகவா லாரன்ஸ்-நயன்தாரா ஆகியாேர் நடிக்கும் படத்தை தயாரித்து, தயாரிப்பாளராகவும் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகார்ப்பூர்வ தகவல்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சைரன்’ படத்தின் ஃப்ரீபேஸ் லுக் வெளியீடு!

ராகவா லாரன்ஸின் அடுத்தடுத்த படங்கள்..

பேய் படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு பொறுத்தமான முகமாக மாறிவிட்டவர், ராகவா லாரன்ஸ். ஆரம்பத்தில் பிறர் இயக்கிய படங்களில் நடித்து வந்த இவர், தெலுங்கு திரையுலகம் மூலம் தன்னை இயக்குநராக அறிமுகப்படுத்தி கொண்டார். அதன் பிறகு இவர் இயக்கத்தில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் என அனைத்தும் ஹிட் ஆகின. இவர் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ளதும் இவர்தான். இப்படம், வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இதையடுத்து அதிகாரம் மற்றும் துர்கா என இரண்டு படங்களில் இவர் நடிக்க உள்ளார். 

நயன்தாராவின் அடுத்த படம்..

பான் இந்தியா அளவில் வெளியாகி மாபெரும் வசூல் மழையை குவித்து வரும் படம், ஜவான். நயன்தாரா இதில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு பாலிவுட்டில் நுழைய எண்ட்ரி டிக்கெட்டை கொடுத்துள்ளது. இந்த படத்தை அடுத்து அவர் நடித்துள்ள இறைவன் படமும் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. இதையடுத்து அவர் தனது 75வது படத்தில் நடிக்க உள்ளார். 

மேலும் படிக்க | ‘தளபதி 68’ படப்பிடிப்பு ‘இந்த’ தேதியில் தொடக்கம்..? வெளியானது ருசிகர தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News