தாராவுக்கு ஷாக் கொடுத்த விக்ரம் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Maari Zee Tamil mega serial update: உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சவால் விட எதையெல்லாம் விக்ரம் போனில் ரெக்கார்ட் செய்து விடுகிறான். மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்     

Written by - RK Spark | Last Updated : Sep 7, 2023, 12:14 PM IST
  • ஒன்று சேர்ந்த மாரி, சூர்யா.
  • தாராவுக்கு ஷாக் கொடுத்த விக்ரம்.
  • மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
தாராவுக்கு ஷாக் கொடுத்த விக்ரம் - மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சூரியாவும் மாரியும் ரிசார்ட்டுக்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது தாரா ப்ரோக்கரை அழைத்து இன்னைக்கு நைட்டுக்குள்ள வாங்க ரெண்டு பேரும் எங்க இருக்காங்கனு நீங்க கண்டு பிடிக்கணும், கண்டு பிடித்து கூட்டிட்டு வர வேண்டாம், அவங்களை போட்டு தள்ளிடுங்க.. ரெண்டு பேரும் செத்து போய்ட்டாங்க என்ற தகவல் மட்டும் தான் எனக்கு வரணும் என்று சொல்லி அனுப்புகிறாள். 

மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்தில் நயன்தாராவிற்கு பதில் ‘இந்த’ நடிகை இடம்பெற இருந்தாரா..?

அடுத்து தேவி போட்டோ முன்பு நின்று உன்னை அனுப்பி வச்சதே நீ தான், அப்படி இருக்கும் போது நீ சூர்யா மாரிக்கு மகளா பிறந்து திரும்பவும் இந்த குடும்பத்தை ஆள நினைக்கிறியா? அது நடக்கவே நடக்காது அவங்க ரெண்டு பேரையும் கொன்னு உன்கிட்ட அனுப்பி வைக்கிறேன் என்று சவால் விடுகிறாள். அதனை தொடர்ந்து போலீஸ் விக்ரம் வீட்டிற்கு வந்து தாராவிடம் கருப்பு உருவம் தன்னை கொல்ல வந்த விஷயம் பற்றி சொல்ல ஆமாம் நான் அனுப்பினேன், உன்னையும் கொல்லுவ. அந்த சூர்யா மாரியையும் கொல்லுவ.. உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சவால் விட எதையெல்லாம் விக்ரம் போனில் ரெக்கார்ட் செய்து விடுகிறான். 

வீடியோ ரெக்கார்ட்டை காட்டி தகுந்த ஆதாரங்கள் கிடைத்த பிறகு இதை வெளியிடுவேன் என்று மிரட்டி விட்டு வெளியே செல்கிறான். இங்கே ரூமில் மாரி சூர்யாவுடன் முதலிரவு நடந்து முடிந்த சந்தோசத்துடன் எழுந்து கொள்ள அவளுக்கு ஒரு விஷன் தோன்றுகிறது. அதில் சூர்யாவுடன் வெளியே செல்ல ஒரு லாரி அவனை அடித்து தூக்குவது போல தெரிய வர அதிர்ச்சியாகி கடவுளை வேண்டுகிறாள்.  அதற்கேற்றாற் போல லாரி ட்ரைவர் சூர்யா, மாரி இருக்கும் ரிசார்ட்டை கண்டு பிடித்து விட இங்கே சூர்யா எழுந்து மாரியிடம் வெளியே போகலாம், உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்ல மாரி டென்ஷன் ஆகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | வனிதா to ஷ்ருத்திகா..தொழில் அதிபர்களாக வலம் வரும் சின்னத்திரை பிரபலங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News