நடிகர் விஜய்சேதுபதி (Vijaysethupathi) தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலமாகவும் வித்தியாசமான கதைக்களத்துடனும் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார்.இவர் திரையிலகில் முன்னணி நாயகனாக வலம் வந்தாலும் கதாநாயகனாக மட்டும்தான் பண்ணுவேன். அதைத் தாண்டி ஒன்னும் செய்ய மாட்டேன்.
என்ற எந்த ஒரு இமேஜ் என்ற வரைமுறைக்குள்ளும் சிக்காமல் நடிகன் தானே! எந்த கேரக்டரா இருந்தா என்ன நல்லா இருந்தா பண்ணலாம். என்று எதார்த்தமாக கூறுவார்.விஜய்சேதுபதி.
ALSO READ : விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்; பா.ரஞ்சித் தெரிவித்துள்ள முக்கிய தகவல்..!!
இவர் நடித்து 4 படங்கள் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. அதில் துக்ளக் தர்பார் இந்த வாரம் "விநாயகர் சதுர்த்தி அன்று நேரடியாக ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளி வரவிருக்கிறது. மற்றும் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் (S.P.jananadhan) இயக்கிய லாபம் திரைப்படம் செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இது தவிர ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். "திரையில் மட்டும் எதார்த்தமாக நடிப்பதோடு இல்லாமல் தரையிலும் சக மனிதர்களை நேசித்து கட்டியணைத்து முத்தம் இடும் அளவுக்கு எதார்த்தமாக பழகுவார். பொதுவாகவே சினிமா பிரபலங்கள் சாமானிய மக்கள் மட்டுமன்றி அவர்களின் ரசிகர்களிடம் கூட நெருங்கமாட்டார்கள். ஆனால் இந்த "ஃபர்னிச்சரையெல்லாம் உடைத்தவர் விஜய் சேதுபதி. இதை நாமும் பார்த்து வருகிறோம்.
இதற்கு உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு ஜீவாகரன் என்ற நிருபர் விஜய் சேதுபதியை இன்டர்வியூ (Interview) எடுக்கச் சென்றுள்ளார். இன்டர்வியூ எல்லாம் முடித்து விட்டு ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறார் அந்த நிருபர். ஆனால் அவருக்கு கண்களில் வெள்ளை நிறத்தில் ஒரு தழும்பு இருந்துள்ளது. அதனால் தயக்கத்துடன் இருந்த அவர் அதனை மறைக்க கூலிங்கிளாஸ் தேடியுள்ளார்.
உடனே அதனை கவனித்த விஜய்சேதுபதி "டேய் உனக்கு இது தான்டா அழகு! வா நாம இதுவரை எடுக்காத போட்டோ ஸ்டில்ஸ் எல்லாம் எடுக்கலாம். என்று வழக்கம் போல அவருடைய ஸ்டைலிலேயே அன்புடன் கட்டிப்பிடித்து , முத்தம் கொடுத்து அந்த நிருபருடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.
இதனை குறிப்பிட்ட நிருபர் ஜீவாகரன் அந்த நிகழ்வுக்குப் அப்புறம் என்னோட கண்ணுல இருக்க தழும்ப நான் பாசிட்டிவா எடுக்க ஆரம்பிச்சிட்டேன். இதுக்கு முழு காரணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் என்று மிகுந்த உற்சாகத்துடனும், நெகிழ்ச்சியுடனும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.!
"சும்மாவா வச்சாங்க அவருக்கு பேரு மக்கள் செல்வன்னு! ஹட்ஸ் ஆஃப் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி!!
ALSO READ : திரௌபதி என்ற பதிப்பகத்தை தொடங்கியுள்ளார்.இயக்குநர் மோகன் ஜீ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR