பீஸ்ட் படத்துக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார். பீஸ்ட் பட ரிசல்ட்டால் ரஜினி தரப்பு அப்செட் ஆகிவிட்டதாகவும் நெல்சனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநர் இந்தப் படத்தை இயக்குவிருப்பதாகவும் கூறப்பட்டது.ஆனால், நெல்சனே ரஜினி படத்தை இயக்குவார் என உறுதியாக கூறப்பட்ட சூழலில் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டது.
22.8.22 - 11:00 AM#Jailer pic.twitter.com/VIieMFd3qO
— Sun Pictures (@sunpictures) August 21, 2022
இந்தச் சூழலில் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதனையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் உள்ள பழைய உட்லண்ட்ஸ் திரையரங்கில் தொடங்கி காவல் நிலையத்தில் நடக்கும் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.
#jailer pic.twitter.com/8KsBQ6DNFg
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar) August 22, 2022
இந்நிலையில், மலையாள நடிகர் விநாயகன் ஜெயிலர் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவருக்கான காட்சி படமாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி மலையாளத்தில் கம்மாட்டி பாடம் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Thalaivar169 is #Jailer@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/tEtqJrvE1c
— Sun Pictures (@sunpictures) June 17, 2022
ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியைத் தவிர்த்து ப்ரியங்கா அருள்மோகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாகவும் தெரிகிறது.
மேலும் படிக்க | கபாலி படத்தால் மன உளைச்சல்தான் - உண்மையை உடைத்த பா. இரஞ்சித்
மேலும் படிக்க | ஜவான் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்வது எப்போது? வெளியான தகவல்!
மேலும் படிக்க | பிரியாணி விருந்துடன் களைகட்டிய விஜய் மக்கள் இயக்க கூட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ