Actor Innocent Passed Away: கொச்சியில் உள்ள லேக்ஷோர் மருத்துவமனை நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், "இன்னொசென்ட் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் எங்கள் கவனிப்பிலும் சிகிச்சையிலும் இருந்தார். கோவிட் தொடர்பான சுவாசப் பிரச்சினைகள் மற்றும் பல உறுப்பு செயலிழப்பு, மாரடைப்பு ஆகியவை அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்தன" என அவரது உயிரிழந்ததை உறுதிசெய்தது.
புற்றுநோயில் இருந்து மீண்ட நடிகர் இன்னொசென்ட் கடந்த மார்ச் 3ஆம் தேதி கொச்சியில் உள்ள விபிஎஸ் லேக்ஷோர் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். 75 வயதான அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
பிருத்வி ராஜ் இரங்கல் பதிவு:
750+ படங்கள்
1972ஆம் ஆண்டு 'நிருதாசாலா' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். கடந்த 50 ஆண்டுகாலமாக சினிமாத்துறையில் இவர், 'அக்கரே நின்னொரு மாறன்', 'காந்திநகர் 2வது தெரு', 'உன்னிகளே ஒரு கதை பாராயம்', 'நாடோடிக்கட்டு', 'முகுந்தெட்ட சுமித்ரா விளக்கு', 'வடக்குநோக்கியந்திரம்', 'ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங்', 'பெருவண்ணாபுரத்தின் காதல் காட்சிகள்', 'மழலைகளின் நடிப்பு', போன்ற 750 படங்களுக்கு மேல் நடித்தார். மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். 'லேசா லேசா', 'நான் அவளை சந்தித்தபோது' ஆகிய தமிழ் படங்களில் நடித்திருந்தார்.
டொவினோ தாமஸ் இரங்கல் பதிவு:
அரசியல் களம்
இவர் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் சாலக்குடியை சேர்ந்த இவர், அதே ஊரில் 1979ஆம் ஆண்டு முனிசிபல் வார்டு கவுன்சிலராகவும், 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுயேச்சையாக நின்று எம்.பி.,யாகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலில் இயங்கியுள்ளார்.
50 Years of career, 500+ movies & 100s of stunning roles... The Malayalam film industry will miss you... RIP Legend...#Innocent pic.twitter.com/WOx2VzezXW
— AB George (@AbGeorge_) March 26, 2023
புத்தகம்
சில ஆண்டுகளுக்கு முன்பு, இன்னொசென்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இருப்பினும், 2015 ஆம் ஆண்டில், அவர் புற்றுநோயில் இருந்து முழுமையாக குணமடைந்ததாக அறிவித்தார். 'ஸ்மைல் இன் தி கேன்சர் வார்டு' என்ற தலைப்பில் அவர் நோயுடன் நடந்திய போரை புத்தமாக எழுதினார்.
கடைசி படம்
நடிகர் கடைசியாக கடந்த ஆண்டு திரைக்கு வந்த பிருத்விராஜ் நடித்த 'கடுவா' படத்தில் நடித்திருந்தார். ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் 'பாசுவும் ஆல்புத்தவிளக்கும்' அவரது கடைசி திரைப்படமாகியுள்ளது. பலரின் அன்புமிக்க கலைஞரின் மறைவுக்கு தென்னிந்தியா முழுவதும் உள்ள பிரபலங்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | காசியில் இளம் நடிகை தற்கொலை...? - படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் விபரீதம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ