மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ்: பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது

Mallikapuram OTT Release: மிகச்சிறந்த உணர்ச்சிகரமான தெய்வீக டிராமா திரைப்படமான "மாளிகப்புரம்" பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது. 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Feb 11, 2023, 02:40 PM IST
  • குழந்தை நட்சத்திரங்களான தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
  • அதுமட்டுமின்றி, சபரிமலைக்கு மலையேற்றம் செய்யும் சுவாமியாக உன்னி முகுந்தன் படத்தில் பிரமிக்க வைக்கிறார்.
  • சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், TG.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
மாளிகப்புரம் ஓடிடி ரிலீஸ்: பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது title=

சமீபத்தில் நாடெங்கும் பரபரப்பைக் கிளப்பிய மாளிகப்புரம் திரைப்படம், பிப்ரவரி 15 அன்று டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் இப்படம் முழுக்க முழுக்க குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்ட படம். 

அறிமுக இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கிய இப்படத்தில் ஒரு குழந்தையின் மனதின் பக்தி மற்றும் அப்பாவித்தனம்  பார்வையாளர்களுக்கு அழகாகச் சென்று சேரும்படி  வழங்கப்படுகிறது. சபரிமலை பற்றி பரிச்சயமானவர்கள், தெரியாதவர்கள் என இருபாலருக்கும் புனித யாத்திரையின் அருமையை உணர்த்தும் கடவுள் கருத்தை மறுவிளக்கம் செய்வதே மாளிகப்புரம். 

Malikappuram OTT Release

குழந்தை நட்சத்திரங்களான தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் இப்படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, சபரிமலைக்கு மலையேற்றம் செய்யும் சுவாமியாக உன்னி முகுந்தன் படத்தில் பிரமிக்க வைக்கிறார். சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி, ரஞ்சி பணிக்கர், TG.ரவி, ஸ்ரீஜித் ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 

Malikappuram OTT Release

மேலும் படிக்க | ’டாடா’ கவினுக்கு ஹீரோயின் அபர்ணா தாஸின் எமோஷ்னல் கடிதம்..!

விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுதியுள்ளார். சந்தோஷ் வர்மா,  பி.கே ஹரிநாராயணன் பாடல்களை எழுத, ரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். ஷமீர் முகம்மது படத்தின் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். Ann Mega Media மற்றும் Kavya Film Company  சார்பில்  பிரியா வேணு மற்றும் நீதா பின்டோ இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

Malikappuram OTT Release

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங்  ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Malikappuram OTT Release

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகிறது.

மேலும் படிக்க | தந்தையாக, கணவனாக வென்றரா கவின்.. -டாடா மூவி விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News