சிவகார்த்திகேயனா இது? வெளியானது மாவீரன் படத்தின் அறிவிப்பு!

மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படம் குறித்த அறிவிப்பு மிரட்டலான ஒரு வீடியோவுடன் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 15, 2022, 12:07 PM IST
  • வெளியானது மாவீரன் படத்தின் அறிவிப்பு.
  • சிவகார்த்திகேயன் புதிய கெட்டப்பில் காட்சி அளிக்கிறார்.
  • மண்டேலா படத்தின் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார்.
சிவகார்த்திகேயனா இது? வெளியானது மாவீரன் படத்தின் அறிவிப்பு! title=

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று பின்னர் திரைத்துறையில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  தற்போது தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஏரளமான ரசிகர்கள் உள்ளனர், இவரின் படங்கள் பெரும்பாலும் சிறந்த பொழுதுபோக்கு படமாக அமைந்துவிடுகிறது.  'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு, இவரது புகழ் அதிகரித்துவிட்டது, சமீபத்தில் கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இவர் நடிப்பில் வெளியான 'டான்' படமும் நல்ல வரவேற்பை பெற்றது.  அடுத்ததாக தொடர்ந்து இவரது கைவசம் 'பிரின்ஸ்' மற்றும் 'அயலான்' போன்ற படங்கள் உள்ளன, இதனை திரையரங்கில் கண்டு மகிழ சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

மேலும் படிக்க | நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

maaveeran

தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார், இந்த படத்தை மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார், இந்த படத்திற்க்கு மாவீரன் என்று அதிகாரபூர்வமாக தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.  இதுகுறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அந்த வீடியோவின் ஓப்பனிங்கே மிரட்டலாக அமைந்துள்ளது, ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனை ஒரு கும்பல் கடுமையாக தாக்க, பின்னர் எழுந்து நின்ற சிவகார்த்திகேயன் அனைவரையும் தாக்க தொடங்குகிறார்.  பொம்மலாட்டம் நிகழ்ச்சி போல ஒரு சாயல் தெரிகிறது, வீடியோவின் தொடக்கம் எப்படி பயங்கரமாக இருந்ததோ அதேபோல வீடியோவின் முடிவும் படம் பற்றிய ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

maaveeran

இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் கெட்டப் வித்தியாசமாக உள்ளது, வேறு மாதிரியான ஹேர்ஸ்டைலில் காட்சி அளிக்கிறார்.  சில நாட்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயனின் இந்த நியூ கெட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.  'மண்டேலா' இயக்குனர் இந்த படத்தை உருவாக்கப்போவதால் இந்த படமும் ஒருவேளை அரசியல் சம்ம்மந்தப்பட்ட படமாக இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.  மேலும் மாவீரன் படத்தின் அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க | அஞ்சான் பார்ட் 2-வா 'தி வாரியர்'? திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News